பொதுமக்கள் பெரும்பாலான உழைப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகின்றனர். இதனாலே கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை ராக்கெட் உயரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. இருந்தும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
தங்கம் விலை கடந்த ஒரு வருடமாகவே 50 ஆயிரத்தினை தாண்டி விட்டது. இதனால் அடுத்த சில வருடங்களில் சவரனுக்கு ஒரு லட்சம் வரும் எனவும் கூட கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மக்கள் தற்போதே தங்கம் வாங்குவதை முதலீடாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வருட தொடக்கத்தில் இருந்தே சில இறக்கம் மட்டுமே தங்கத்தில் இருந்தது. ஆனால் பெரிய அளவில் நாளுக்கு நாள் தங்கத்தில் விலை உயர்ந்து வருகிறது. நேற்று 53000 ரூபாயிற்கு விற்ற தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.
நேற்று கிராமுக்கு 41 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை ரூபாய் 6625க்கு விற்கப்பட்டது. இன்று ஏற்றத்துடன் தங்கத்தின் விலை 6666 ரூபாயிற்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் 94.50 ரூபாயிற்கு விற்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…