நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலானது கடந்த மே 27ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில் தமிழக உயர்கல்வி துறையின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இதில் காலியாக இருக்கும் 1,07,029 இளநிலை படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி கடந்த மே 6ம் தேதி தொடங்கி 24ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது.
இதில் 2,58,527 பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். மேலும் 2,11,010 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. முதலில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு முடிவடைந்து.
பிறகு பொது பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இதற்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதாவது ஜூலை மூன்றாம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ‘ tngasa.in’ என்ற இணையதளத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…