விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மூன்று நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜூலை 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் அதிமுக மற்றும் தேமுதிக இந்த தேர்தலை புறக்கணித்து விட்டது. சுயேச்சை போட்டியாளர்களாக பலரும் இந்த தொகுதியில் போட்டி போட்டு இருக்கிறார்கள். மொத்தம் 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 29 பேரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகின்றது. இன்று மாலையுடன் தொகுதியை சாராதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டிருக்கின்றார்.
அதன்படி ஜூலை 8-ம் தேதி இன்று, நாளை ஜூலை 9ஆம் தேதி அதைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…