Connect with us

govt update news

ஆதார் அப்டேட் பண்ணிட்டீங்களா?..இல்லைனா இனியாவது பண்ணுங்க..கடைசி தேதியினை நீட்டித்த அரசு..

Published

on

aadhaar update date extended

இந்திய குடிமகன் அனைவரும் ஆதார் வைத்திருப்பது கட்டாயம். ஏனென்றால் இந்த ஆதார் கார்டின் மூலம்தான் நாம் வங்கி கணக்கில் இருந்து குடும்ப அட்டை வரை நமது அத்தியாவசிய தேவைகளை பெற முடியும். இந்த ஆதார் கார்டில் நமது தகவல்களை சரியாக கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே இந்திய அரசு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை சரிசெய்ய ஜுன் 14ஆம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. தற்போது இந்த தேதியானது நீட்டிக்கப்பட்டுள்ளது்.

இதன்படி ஆதார் கார்டு சரிசெய்வதற்கான  காலத்தினை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலுக்கு முகவரி சான்றையும் ஆதார் கார்டும் நமக்கு தேவைப்படும்.

aadhaar update easy through uidai

aadhaar update easy through uidai

ஆதார் அப்டேட் பண்ணுவதற்கான கட்டணம்:

ஆதார் அப்டேட்டை http://www.myaadhaar.uidai.gov.in எனப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று இலவசமாக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை நாம் டிஜிட்டல் சேவா என அழைக்கப்படும் CSC சென்டரில் ரூ. 25 கட்டணமாக செலுத்தியும் அப்டேட் செய்து கொள்ளலாம்.

தேவையான சான்றுகள்:

இந்த அப்டேட்டில் நாம் நமது முகவரி, பெயர், பிறந்த தேதி அன அனைத்தையுமே அப்டேட் செய்யலாம். இவ்வாறு அப்டேட் செய்வதற்கு நமக்கு நமது ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். அப்போதுதான் நாம் நமது மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை உபயோகித்து நமது ஆதாரினை அப்டேட் செய்யலாம்.

aadhaar update

aadhaar update

ஆதார் கார்டினை அப்டேட் செய்வதற்கான படிநிலைகள்:

  1. முதலில் ஆதாரின் இணையதளமான http://www.myaadhaar.uidai.gov.in என்ற முகவரிக்கு செல்லவும்.
  2. பின் login செய்து அதில் நமது பெயர்/பாலினம்/பிறந்த தேதி மற்றும் முகவரிக்கான பட்டனை அழுத்தவும்.
  3. ஆதார் அப்டேட் என்ற பட்டனை அழுத்தவும்.
  4. நாம் எதனை அப்டேட் செய்கிறோமோ அந்த பட்டனை அழுத்தவும்.
  5. பின் தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்யவும்.
  6. பின் Pay now என்ற பட்டனை அழுத்திய பின் வரும் URN எண்ணை குறித்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணின் மூலம் நமது ஆதார் அப்டேட் ஆகிவிட்டதா என கண்டறியலாம்.

ஆதார் அப்டேட் ஆகியதை எவ்வாறு கண்டறிவது:

நமது மொபைலுக்கு வந்த URN எண்ணை வைத்து http://www.https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்ற இணையதளத்திற்கு சென்று அதனுள் நமது ஆதார் கார்டானது நாம் அளித்த தகவலுக்கு ஏற்ப அப்டேட் ஆகிவிட்டதா என காணலாம்.

google news