இந்திய குடிமகன் அனைவரும் ஆதார் வைத்திருப்பது கட்டாயம். ஏனென்றால் இந்த ஆதார் கார்டின் மூலம்தான் நாம் வங்கி கணக்கில் இருந்து குடும்ப அட்டை வரை நமது அத்தியாவசிய தேவைகளை பெற முடியும். இந்த ஆதார் கார்டில் நமது தகவல்களை சரியாக கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே இந்திய அரசு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை சரிசெய்ய ஜுன் 14ஆம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. தற்போது இந்த தேதியானது நீட்டிக்கப்பட்டுள்ளது்.
இதன்படி ஆதார் கார்டு சரிசெய்வதற்கான காலத்தினை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலுக்கு முகவரி சான்றையும் ஆதார் கார்டும் நமக்கு தேவைப்படும்.
ஆதார் அப்டேட் பண்ணுவதற்கான கட்டணம்:
ஆதார் அப்டேட்டை http://www.myaadhaar.uidai.gov.in எனப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று இலவசமாக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை நாம் டிஜிட்டல் சேவா என அழைக்கப்படும் CSC சென்டரில் ரூ. 25 கட்டணமாக செலுத்தியும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
தேவையான சான்றுகள்:
இந்த அப்டேட்டில் நாம் நமது முகவரி, பெயர், பிறந்த தேதி அன அனைத்தையுமே அப்டேட் செய்யலாம். இவ்வாறு அப்டேட் செய்வதற்கு நமக்கு நமது ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். அப்போதுதான் நாம் நமது மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை உபயோகித்து நமது ஆதாரினை அப்டேட் செய்யலாம்.
ஆதார் கார்டினை அப்டேட் செய்வதற்கான படிநிலைகள்:
ஆதார் அப்டேட் ஆகியதை எவ்வாறு கண்டறிவது:
நமது மொபைலுக்கு வந்த URN எண்ணை வைத்து http://www.https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்ற இணையதளத்திற்கு சென்று அதனுள் நமது ஆதார் கார்டானது நாம் அளித்த தகவலுக்கு ஏற்ப அப்டேட் ஆகிவிட்டதா என காணலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…