govt update news
2000 நோட்டுகளை மாற்றிவிட்டீர்களா?..உங்களுக்கான மிக முக்கியமான செய்தி இதோ..
இந்திய அரசாங்கம் மே 19ஆம் தேதி மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொருவரும் தங்களிடம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை எக்ஸ்சேஞ்ச் அல்லது வங்கிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்கிலும், நகை வாங்குவதற்கும் மற்றும் மொத்த பொருட்களை வாங்குவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் எடுத்த கணக்கெடுப்பின்படி 55% மக்கள் இந்த பணத்தை வங்கிகளில் முதலீடு செய்ய போவதாகவும், 23% மக்கள் இதனை மற்ற செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். 22% மக்கள் இந்த பணத்தினை வங்கிகளில் மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 61% மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் எவ்வித சிரமங்களையும் கையாளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் 51 சதவீத மக்கள் இதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும் 44 சதவீத மக்கள் தினசரி லிமிட்டை 20000 ரூபாயிலிருந்து அதிகபடுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ரிசர்வ் வங்கியானது அதற்கு வாய்ப்பில்லை எனவும் தினசரி லிமிட் 20000 ரூபாய்தான் அதற்கான லிமிட்டை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளது.