Connect with us

latest news

அடேங்கப்பா… இவ்வளவு பெருசா..? உலகின் மிக நீளமான சைக்கிள்.. கின்னஸ் சாதனை படைத்த பொறியாளர்கள்..!

Published

on

உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள் 8 டச்சு பொறியாளர்கள்.

உலகிலேயே மிக நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 180 அடி நீளம் உள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னீ ரியான் என்பவர் 155 அடி நீளம் இருக்கும் சைக்கிளை தயாரித்திருந்தார், இதுதான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த சாதனையை முறியடித்து 180 அடி நீளம் உள்ள சைக்கிள் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த யுவான் ஷால் என்ற 39 வயதான பொறியாளர் சிறு வயது முதலே மிக நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் கனவை நினைவாக்கும் விதமாக தன் நண்பர்களுடன் இணைந்து இந்த சைக்கிளை தயாரித்து இருக்கின்றார்.

இது தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிக நீளமான சைக்கிள் என்ற சாதனை படைத்திருக்கின்றது. உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனையை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் மிக நீளமான சைக்கிள் தயாரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சாதனைகள் முறியடிக்கப்பட்டு தற்போது 180 அடி உயரத்திற்கு வளர்ந்து இருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *