பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஸ்டைலாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி தட்டிச்சென்ற வீரர்…

0
102

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கலை கட்டி வருகிறது. நாளுக்கு நாள் இதன் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே இருக்கும் நிலையில் தினம் சில வைரலான தகவல்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், துருக்கியை சேர்ந்த துப்பாக்கிச் சூடும் வீரர் யூசஃப் டிகெக். இவர் தான் இன்றைய வைரல் நாயகனாக மாறி இருக்கிறார்.  10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் யூசஃப் வெள்ளி பதக்கம் வாங்கி இருக்கிறார். இவருக்கு 51 வயது ஆகுவது இதில் கூடுதல் சுவாரசியம்.

பொதுவாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் சத்தத்தை குறைக்கும் நாய் ஸ்கேன்சிலேசன் ஹெட்செட், குறி வைக்க ஏதுவாக லென்ஸ் மற்றும் தெளிவான பார்வைக்கு ஒரு லென்ஸ் என பக்கா செட்டப்பில் தான் போட்டியில் கலந்து கொள்வதை இதுவரை பார்த்திருக்கிறோம்.

ஆனால் நேற்றைய போட்டியில் யூசஃப் எந்தவித பாதுகாப்பு  உபகரணங்களும் அணிந்து கொள்ளாமல் ஸ்டைலாக தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு வெறும் அவருடைய மூக்கு கண்ணாடியை மட்டும் அணிந்து போட்டியில் கலந்து கொண்டார். இதில் அவர் வெள்ளிப் பதக்கத்தையும் துருக்கி நாட்டிற்கு பெற்று கொடுத்திருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

2002 ஆம் ஆண்டிலிருந்து யூசஃப் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். பாரிஸ் அவருக்கு ஐந்தாவது ஒலிம்பிக்ஸ். இதில் முதல்முறையாக பதக்கம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here