பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கலை கட்டி வருகிறது. நாளுக்கு நாள் இதன் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே இருக்கும் நிலையில் தினம் சில வைரலான தகவல்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், துருக்கியை சேர்ந்த துப்பாக்கிச் சூடும் வீரர் யூசஃப் டிகெக். இவர் தான் இன்றைய வைரல் நாயகனாக மாறி இருக்கிறார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் யூசஃப் வெள்ளி பதக்கம் வாங்கி இருக்கிறார். இவருக்கு 51 வயது ஆகுவது இதில் கூடுதல் சுவாரசியம்.
பொதுவாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் சத்தத்தை குறைக்கும் நாய் ஸ்கேன்சிலேசன் ஹெட்செட், குறி வைக்க ஏதுவாக லென்ஸ் மற்றும் தெளிவான பார்வைக்கு ஒரு லென்ஸ் என பக்கா செட்டப்பில் தான் போட்டியில் கலந்து கொள்வதை இதுவரை பார்த்திருக்கிறோம்.
ஆனால் நேற்றைய போட்டியில் யூசஃப் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்து கொள்ளாமல் ஸ்டைலாக தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு வெறும் அவருடைய மூக்கு கண்ணாடியை மட்டும் அணிந்து போட்டியில் கலந்து கொண்டார். இதில் அவர் வெள்ளிப் பதக்கத்தையும் துருக்கி நாட்டிற்கு பெற்று கொடுத்திருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
2002 ஆம் ஆண்டிலிருந்து யூசஃப் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். பாரிஸ் அவருக்கு ஐந்தாவது ஒலிம்பிக்ஸ். இதில் முதல்முறையாக பதக்கம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…