சேட்டன் வந்தல்லே!…டிஸ்சார்ஜ் ஆகி வந்தல்லே!…வீடு திரும்பிய வேட்டையன்…

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகீட்சை முடிந்து அவர் நலமமுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாத் துறையில் ஐம்பது ஆண்டுகால பணியை நெருங்கி வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “வேட்டையன்” படம் உலகம் முழுவதும் வருகிற பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rajinikanth

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்த ரஜினிகாந்திற்கு கடந்த முப்பதாம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர். தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் பூரண நலமடைந்து வீடு திரும்ப பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தியிருந்தனர். ரஜினி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த் சிகீட்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அறுவை சிகீட்சை தேவைப்படாத காரணத்தால், இதய தமனியில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்பியிருப்பது ரஜினியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் “கூலி” படத்தில் நடிப்பதை தொடருவார் என கோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

sankar sundar

Recent Posts

பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும்  இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம்…

1 min ago

உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…

தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த…

2 hours ago

வேகம் முக்கியமில்ல பிகிலு…விவேகம் தான் முக்கியம்…தவெக தலைவர் விஜய் அறிவுரை…

தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என…

2 hours ago

ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..

நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது.…

3 hours ago

உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில்…

4 hours ago

மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 'டிரின்பாகோ…

4 hours ago