இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனியின் கோபம் பற்றி ஹர்பஜன் சிங் சொன்ன கருத்துக்கு சி.எஸ்.கே. அணியின் பிசியோ டாமி சிம்செக் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் பேசிய ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டிக்கு பிறகு எம்.எஸ். டோனி டிரெசிங் ரூமில் இருந்த திரையை ஓங்கி குத்தினார் என்றும் அதனை தான், மாடிப்படியில் இருந்து பார்த்ததாகவும் தெரிவித்தார். அந்த போட்டியின் போது ஹர்பஜன் சிங் கமென்ட்ரி செய்து வந்தார்.
“”நான் படிக்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவர்கள் களத்தில் ஆரவாரமாக கொண்டாடினர். சி.எஸ்.கே. வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்து நின்றிருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. ஆர்.சி.பி. வீரர்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள் எம்.எஸ். டோனி மீண்டும் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார். அப்போது, அங்கிருந்த திரையை எம்.எஸ். டோனி வேகமாக குத்தினார். இதில் எந்த தவறும் இல்லை. விளையாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று தான்,” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங்கின் இத்தகைய கருத்துக்கு சி.எஸ்.கே. அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் காட்டமாக கருத்து தெரிவித்து பதிலடி கொடுத்தார். மேலும், இந்தத் தகவல் “போலி செய்தி” என்றும் “முழு குப்பை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில் அவர், “இது முழுக்க முழுக்க குப்பை! எம்.எஸ். டோனி அப்படி எதையும் உடைக்கவில்லை. போட்டிக்கு பிறகு அவரை நான் இதுவரை அப்படி பார்த்ததே இல்லை. போலி செய்தி!,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…