இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை பகிர்ந்து இருப்பதை அடுத்து, ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018 செப்டம்பர் மாதம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, அதில் காயம் ஏற்பட்டு 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்ட போதிலும், ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல இருந்தார். கடைசியாக கடந்த டிசம்பர் 2018-இல் முதல் தர போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடினார்.
இந்திய அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். தற்போது பாண்டியா பதிவிட்டுள்ள வீடியோக்களை பார்க்கும் போது அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் கொண்டிருப்பது தெரிகிறது. எனினும், இது குறித்து அவர் அணி நிர்வாகத்திடம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
“ஹர்திக் மீண்டும் சிவப்பு பந்தில் பந்துவீசுவது சிறப்பாகவே இருக்கிறது, ஆனால் அவர் இதுபற்றி சம்பந்தப்பட்ட தேர்வுக்குழு தலைவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரிடம் ஏதும் தகவல் தெரிவித்து இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது,” என பிசிசிஐ வட்டார மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கும் போதிலும், ஹர்திக் பாண்டியா தற்போதைய வங்கதேச தொடரில் இடம்பெறுவது கேள்விக்குறியான விஷயம் தான். எனினும், அடுத்தடுத்து இந்திய அணி விளையாட இருக்கும் டெஸ்ட் தொடர்களில் ஹர்திக் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும். குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஹர்திக் அணியில் இருப்பது சாதகமாக இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…