ஹெச்.டி.எஃப்.சி. வங்கி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வகை கிரெடிட் கார்டு தான் ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு. ரிகாலியா கிரெடிட் கார்டுகள் ஏற்கனவே சந்தையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ரிகாலியா கிரெடிட் கார்டுகளில்: ரிகாலியா, ரிகாலியா ஃபர்ஸ்ட் (நிறுத்தப்பட்டு விட்டது) தற்போது ரிகாலியா கோல்டு போன்ற பெயர்களில் பல்வேறு வேரியண்ட்கள் உள்ளன.
ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு விலை மற்றும் ஒரிஜினல் ரிகாலியா உடன் ஒப்பிடும் போது எது சிறப்பானது என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு
– கட்டணம் மற்றும் பெறுவதற்கான தகுதி: வருடாந்திர கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 500 மற்றும் ஜி.எஸ்.டி. வரி. ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் செலவிடும் போது கட்டணம் ரத்து செய்யப்பட்டு விடும்.
– மாத சம்பலம் ரூ. 1 லட்சம் அல்லது வருடத்திற்கு ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஐ.டி.ஆர். பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
அறிமுக சலுகை:
முதல் 90 நாட்களுக்குள் ரூ. 1 லட்சம் செலவிடும் போது, ஒரு வருடத்திற்கான கிளப் விஸ்தாரா டையர் மற்றும் எம்.எம்.டி. பிளாக் சந்தா வழங்கப்படுகிறது.
மைல்ஸ்டோன் பலன்கள்:
காலாண்டு வாக்கில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் செலவிட்டிருப்பின் ஒவ்வொரு காலாண்டிற்கும் 5K வவுச்சர்கள் வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் செலவிட்டிருந்தால், 5K விமான வவுச்சர். ஆண்டுக்கு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் செலவிட்டிருந்தால் மற்றொரு 5K விமான வவுச்சர் வழங்கப்படும்.
ரிவார்டு புள்ளிகள்:
ஸ்டாண்டர்டு ரிவார்டு ரேட்: ஒவ்வொரு ரூ. 150 பரிவர்த்தனைக்கும் 4 ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு ரிவார்டு புள்ளிக்கு நிகரான மதிப்பு ரூ. 50 பைசா (அதாவது 1.33 சதவீதம் ரிவார்டு ரேட்)
அக்செல்லரேடெட் ரிவார்டு ரேட்: எம் அண்ட் எஸ், மிந்த்ரா, நைக்கா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்று குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு 5x ரிவார்டு ரேட் (-6.7 சதவீதம் ரிவார்டு ரேட்). மாதம் 5K புள்ளிகள் வழங்கப்படும்.
எரிபொருள் நிரப்புவது, வாலெட் லோடு, வாடகை செலுத்துவது மற்றும் வரி கட்டணங்களுக்கு எவ்வித ரிவார்டு புள்ளிகளும் கிடையாது. ஃபியூவல் சார்ஜ் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.
லாஞ் அக்சஸ்:
உள்நாட்டு முனையங்கள்: உள்நாட்டு விமான நிலையங்களில் ஆண்டுக்கு 12 முறை லாஞ் பயன்படுத்தும் வசதி.
சர்வதேச முனையங்கள்: PP மூலம் ஆறு முறை சர்வதேச விமான நிலையங்களில் லாஞ் பயன்படுத்தும் வசதி
சர்வதேச லாஞ் அக்சஸ் பிரைமரி மற்றும் ஆட்-ஆன் கார்டு வைத்திருப்போருடன் பகிரப்படுகிறது. எனினும், எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு பலன்கள்:
ஒவ்வொரு ரூ. 150 மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கும் 1.33 சதவீதம் ரிவார்டு ரேட்
ரிகாலியா கோல்டு அடிப்படை ரிவார்டு ரேட் மற்றும் பழைய ரிகாலியா கார்டின் ரிவார்டு ரேட் என இரண்டும் ஒன்று தான். இரு கார்டுகளிலும் ரிவார்டு ரேட் 1.33 சதவீதம் தான்.
ஏற்புடைய அறிமுக பலன்கள்:
அறிமுக பலன்களாக, ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கார்டு கிளப் விஸ்தாரா சில்வர் டையர் மற்றும் எம்.எம்.டி. பிளாக் சந்தா வழங்கப்படுகிறது. எனினும், அறிமுக பலன்களை பெற கார்டை பெற்றதில் இருந்து சரியாக ஒரு மாதத்திற்குள் ரூ. 1 லட்சம் செலவிட்டு இருப்பது அவசியம் ஆகும்.
எம்.எம்.டி. பிளாக் சந்தா எந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், கிளப் விஸ்தாராவில் சில்வர் டையர் கொண்டு எகானமி கவுண்ட்டர்-இல் செக்-இன் செய்வதில் முன்னுரிமை பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் 5 கிலோ வரை கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகை கார்டு பயன்படுத்தும் இரண்டாவது ஆண்டில் தான் பெற முடியும். அந்த வகையில், இரண்டு சந்தாவும் இரண்டாவது ஆண்டில் தான் வழங்கப்படும்.
முதல் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தும் போது 2 ஆயிரத்து 500 கிஃப்ட் வவுச்சர்களை வெல்கம் கிட் சார்பில் பெற்றுக் கொள்ளலாம்.
சிறந்த காலாண்டு மைல்ஸ்டோன் பலன்கள்:
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கார்டு ஒவ்வொரு காலாண்டிலும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் செலவிடுவோருக்கு 1500 வவுச்சர்களை வழங்குகிறது. காலாண்டு அட்டவணை – ஜனவரி முதல் மார்ச், ஏப்ரல் முதல் ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டங்களை கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக ரிகாலியா கோல்டு கார்டை பெற காலாண்டு துவங்கும் போது விண்ணப்பிப்பது சிறந்ததாக இருக்கும். காலாண்டு மைல்ஸ்டோன் சலுகையின் கீழ் எம்.எம்.டி. ஓட்டல்கள், மேரியட் எக்ஸ்பீரியன்ஸ், மிந்த்ரா, எம் அண்ட் எஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வவுச்சர்களை பெற முடியும். இதில் அதிக பயன்தருவது மிந்த்ரா மட்டும் தான் எனலாம். மற்றவைகள் அனைவருக்கும் ஒவ்வொரு காலண்டிலும் தேவைப்படாது.
எனினும், இதில் ஒரு நல்ல விஷயம் பல்வேறு வவுச்சர்களை ஒரே ஆர்டரில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தான். இதற்கான வேலிடிட்டி வவுச்சரிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த வகையில் வவுச்சரின் வேலிடிட்டி ஒரு ஆண்டு எனில், நீங்கள் பல்வேறு காலாண்டு மைல்ஸ்டோன் வவுச்சர்களை இணைத்து பயன்படுத்த முடியும்.
நல்ல பலன்களை கொடுக்கும் விமான வவுச்சர்கள்:
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு வழங்கும் மற்றொரு மைல்ஸ்டோன் பலன்கள் இலவச விமான டிக்கெட்கள் எனலாம். ஆனிவர்சரி ஆண்டில் ரூ. 5 லட்சம் மற்றும் ரூ. 7 லட்சம் வரை செலவிடும் போது ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள விமான டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. விமான டிக்கெட்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை.
தேர்வு செய்யப்பட்ட பிராண்டுகளுக்கு அக்செல்லரேட் செய்யப்பட்ட RP-க்கள்
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டை தேர்வு செய்யப்பட்ட வியாரிகளிடம் பயன்படுத்தும் போது 5x ரிவார்டு பாயிண்ட்கள் வழங்கப்படுகிறது. இவை மிந்த்ரா, நைக்கா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் எம் அண்ட் எஸ் ஆகும். இந்த தளங்களில் கார்டை பயன்படுத்தும் போது 6.7 சதவீதம் வரை ரிவார்டு ரேட் பெற்றுக் கொள்ள முடியும். அதிகபட்சம் ரூ. 77 ஆயிரம் வரை ஷாப்பிங் செய்யும் போது, மாதம் 5 ஆயிரம் போனஸ் ரிவார்டு பாயிண்ட்கள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையை ஆன்லைன் வலைதளம் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் முனையங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் வியாபாரங்கள் எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் நீட்டிக்கவோ அல்லது குறைக்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.
ஸ்மார்ட்பை பலன்கள்:
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு ஸ்மார்ட்பை பிளாட்ஃபார்மில், ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா வழங்கிய அதே பலன்களை வழங்குகிறது.
கோல்டு கேட்டலாக் 1.7 சதவீதம் வரை அதிகரிக்கும்
ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டில் இருக்கும் கோல்டு கேட்டலாகில் ரிடம்ப்ஷன் வேல்யு 65 புள்ளிகள் என்று ஹெச்.டி.எஃப்.சி. குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ரிவார்டு பாயிண்ட்களை கோல்டு கேட்டலாகில் பயன்படுத்தும் போது ரிவார்டு ரேட் 1.7 சதவீதமாகவே இருக்கும். மேலும் கோல்டு கேட்டலாகில் என்ன சேர்க்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டின் இன்னாதவைகள்:
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு எரிபொருள், வாலெட் ரிலோடு, எளிய மாத தவணை முறை பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை, அரசு கட்டணங்களுக்கு ரிவார்டு பாயிண்ட்களை வழங்காது.
இதுதவிர மளிகை சாமான்களை வாங்கும் போது பயன்படுத்தவும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அந்த வகையில், மளிகை பயன்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2 ஆயிரம் ரிவார்டு பாயிண்ட்களையே பெற முடியும்.
விமான வவுச்சர் விவரங்களில் தெளிவில்லை:
மைல்ஸ்டோன் பலன்களில் விமான வவுச்சர் சிறப்பான விஷயம் தான். எனினும், 5K ரிவார்டு பயணங்கள் வலைதள வவுச்சரா அல்லது குறிப்பிட்ட ஏர்லைன் வவுச்சரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. பயணங்கள் வலைதள வவுச்சரில் பெரும்பாலும் அதிக வசதிகள் மற்றும் கூடுதல் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
கோல்டு கேட்டலாகில் என்ன இருக்கும்?
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே கோல்டு கேட்டலாகில் 65p ரிடம்ப்ஷன் வேல்யூ வழங்கப்படுகிறது. இதில் சில நல்ல வவுச்சர்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
ரிவார்டுகள் வவுச்சர் வடிவிலேயே உள்ளன:
ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் செலவிட்டிருப்பின் ரிவார்டு ரேட் 3.5 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. எனினும், இதற்கான மதிப்புகள் பெரும்பாலும் பிராண்டு வுவச்சர்களாகவே வழங்கப்படுகின்றன.
கருத்துக்கள்:
ஹெச்.டி.எஃப்சி. ரிகாலியா கோல்டு கிரெடிட் கார்டு, ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கார்டை விட சிறப்பான பலன்களை வழங்குவதாகவே தெரிகிறது. எனினும், பெரும்பாலான ரிவார்டுகள் பிராண்டு வவுச்சர்களாகவே வழங்கப்படுகின்றன. இது பெருமளவில் கட்டுப்பாடுகளை விதிக்கும் செயல் என்றே கூற வேண்டும். வவுச்சர்களை பயன்படுத்தாமல் விட்டால், அதற்கான பலன்கள் கிடைக்காமலேயே போகும்.
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா, கேஷ்பேக் கிரெடிட் கார்டா அல்லது ரிவார்டு பாயிண்ட் கிரெடிட் கார்டா அல்லது ஏல்மைல்ஸ் கிரெடிட் கார்டா என்ற குழப்ப நிலையே நீடிக்கிறது. இதன் ரிவார்டுகள் பல்வேறு தளங்களில் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும், பல்வேறு இதர கிரெடிட் கார்டுகள் இதைவித அதிக ரிவார்டு ரேட்களை வழங்கி வருகின்றன.
ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கோல்டு கார்டை பெறுவதற்கு ஹெச்.டி.எஃப்.சி. ரிகாலியா கார்டை பெறுவது நல்லது. இது போன்று கார்டுகள் இடையே எதனை தேர்வு செய்யலாம் என்ற முடிவுகளை தீர்க்கமான சிந்தித்த பின் எடுப்பது நல்லது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…