latest news
வெயில் காலத்தில் உடம்பு சூட்டை குறைக்கணுமா?.. அப்போ இந்த பழங்கள சாப்டுங்க..
இயற்கை நமக்கு தந்த அற்புதங்கள் பல. காய்கள் , கனிகள், கீரைகள் என பல பயனுள்ள பொருட்களை தந்துள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு காய்கள், கனிகள் என நமக்கு கிடைக்கின்றது. அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்துமே அந்தந்த காலத்திற்கு உண்ண கூடியதுதான். சித்திரை மாதம் பிறக்கும் போது நாம் அனைவரும் வீட்டில் பழங்களை வைத்து காலையில் அதன் முன் கண் விழிப்போம். வெயில் காலத்தை சமாளிக்க இப்படியான பழங்களை நாம் சாப்பிட வேண்டும் என்பதற்கான அடிப்படையும் அதில் உண்டு. அப்படிப்பட்ட பழங்களை பற்றி நாம் பார்ப்போம்.
தற்பூசணி:
விட்டமின்-சி சத்து நிறைந்த இப்பழத்தில் லைக்கோபீன்(Lycopene) என்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. மேலும் இதில் 90% க்கும் மேல் தண்ணீர் சத்து உள்ளதால் இது வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும். மேலும் இது சாப்பிடுவதால் இதய துடிப்பு சீராகும் மற்றும் எழும்பு சம்பந்தமான பிரச்சினைகள், குடல் பிரச்சினைகளயும் சரி செய்யும்.
மாம்பழம்:
இதில் விட்டமின் -ஏ, மற்றும் விட்டமின்-சி உள்ளதால் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடெண்டாக பயன்படுகிறது. மேலும் இது வெயில் காலத்தில் ஏற்படும் மலசிக்கலை போக்குகிறது. மேலும் இதை சாப்பிடுவதால் பல சரும நோய்கள், கண் சம்பந்தமான பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.
கொய்யாபழம்:
நார்சத்துகள் அதிகம் கொண்ட கொய்யாபழத்தில் விட்டமின்-ஏ, சி, இ போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இதுவும் மலசிக்கலை போக்ககூடியதுதான். மேலும் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறும்.
முலாம் பழம்:
மஸ்க் மெலன் என அழைக்கப்படும் முலாம் பழத்தில் 95%க்கும் மேல் நீர்சத்துகள் உள்ளன. எனவே இதனை ஜுஸ் போட்டு குடிப்பதால் உடலில் உள்ள உஷ்னம் குறையும். மேலும் இதனை சாப்பிடுவதன் மூலம் கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். இப்பழம் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றவும் உதவுகிறது.
திராட்சை பழம்:
பன்னீர் திராட்சை என அழைக்கப்படும் திராட்சையில் விட்டமின்-சி சத்துகள் இருப்பதால் இதுவும் உடல் சூட்டை தனிக்க உதவுகிறது. மேலும் இத்திராட்சையை ஜுஸ் செய்து குடிப்பதால் மைக்ரைன் தலைவலி என அழைக்கப்படும் ஒற்றை தலைவலியை வராமல் தடுக்கிறது.
ஆரஞ்சு பழம்:
இந்த பழத்திலும் விட்டமின்-சி சத்துகள் அதிகம் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். மேலும் வயிறு பிரச்சினைகளையும் இதன் மூலம் சரிசெய்ய முடியும்.
இப்படியான பழங்களை சாப்பிட்டு வெயில் காலத்திலும் நாம் நலமுடன் வாழலாம்.