Categories: latest news

வெயில் காலத்தில் உடம்பு சூட்டை குறைக்கணுமா?.. அப்போ இந்த பழங்கள சாப்டுங்க..

இயற்கை நமக்கு தந்த அற்புதங்கள் பல. காய்கள் , கனிகள், கீரைகள் என பல பயனுள்ள பொருட்களை தந்துள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு காய்கள், கனிகள் என நமக்கு கிடைக்கின்றது. அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்துமே அந்தந்த காலத்திற்கு உண்ண கூடியதுதான். சித்திரை மாதம் பிறக்கும் போது நாம் அனைவரும் வீட்டில் பழங்களை வைத்து காலையில் அதன் முன் கண் விழிப்போம். வெயில் காலத்தை சமாளிக்க இப்படியான பழங்களை நாம் சாப்பிட வேண்டும் என்பதற்கான அடிப்படையும் அதில் உண்டு. அப்படிப்பட்ட பழங்களை பற்றி  நாம் பார்ப்போம்.

தற்பூசணி:

watermelon1

விட்டமின்-சி சத்து நிறைந்த இப்பழத்தில் லைக்கோபீன்(Lycopene) என்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. மேலும் இதில் 90% க்கும் மேல் தண்ணீர் சத்து உள்ளதால் இது வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும். மேலும் இது சாப்பிடுவதால் இதய துடிப்பு சீராகும் மற்றும் எழும்பு சம்பந்தமான பிரச்சினைகள், குடல் பிரச்சினைகளயும் சரி செய்யும்.

மாம்பழம்:

mango2

இதில் விட்டமின் -ஏ, மற்றும் விட்டமின்-சி உள்ளதால் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடெண்டாக பயன்படுகிறது. மேலும் இது வெயில் காலத்தில் ஏற்படும் மலசிக்கலை போக்குகிறது. மேலும் இதை சாப்பிடுவதால் பல சரும நோய்கள், கண் சம்பந்தமான பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

கொய்யாபழம்:

guava2

நார்சத்துகள் அதிகம் கொண்ட கொய்யாபழத்தில் விட்டமின்-ஏ, சி, இ போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இதுவும் மலசிக்கலை போக்ககூடியதுதான். மேலும் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறும்.

முலாம் பழம்:

muskmelon2

மஸ்க் மெலன் என அழைக்கப்படும் முலாம் பழத்தில் 95%க்கும் மேல் நீர்சத்துகள் உள்ளன. எனவே இதனை ஜுஸ் போட்டு குடிப்பதால் உடலில் உள்ள உஷ்னம் குறையும். மேலும் இதனை சாப்பிடுவதன் மூலம் கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். இப்பழம் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றவும் உதவுகிறது.

திராட்சை பழம்:

grapes2

பன்னீர் திராட்சை என அழைக்கப்படும் திராட்சையில் விட்டமின்-சி சத்துகள் இருப்பதால் இதுவும் உடல் சூட்டை தனிக்க உதவுகிறது. மேலும் இத்திராட்சையை ஜுஸ் செய்து குடிப்பதால் மைக்ரைன் தலைவலி என அழைக்கப்படும் ஒற்றை தலைவலியை வராமல் தடுக்கிறது.

ஆரஞ்சு பழம்:

orange2

இந்த பழத்திலும் விட்டமின்-சி சத்துகள் அதிகம் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். மேலும் வயிறு பிரச்சினைகளையும் இதன் மூலம் சரிசெய்ய முடியும்.

இப்படியான பழங்களை சாப்பிட்டு வெயில் காலத்திலும் நாம் நலமுடன் வாழலாம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago