காத்திருக்கும் கடுமையான சவால்…எகிறி அடிக்குமா இந்திய அணி?…

பங்களாதேஷுடனான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த போட்டியோடு இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பி விடும் பங்களாதேஷ் அணி. எதிர்பார்த்தது போலவே தான் இந்த தொடரில் வங்கதேச அணி தும்சம் செய்து சாறு பிழிந்து விட்டது இந்திய அணி.

டெஸ்ட் போட்டி தொடரை எற்கனவே வென்றாகி விட்டது. மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டி தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டதால் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இன்று நடைபெற உள்ள போட்டி விறுவிறுப்பாக அமைந்தாலும், அமையா விட்டாலும் சாம்பியன் பட்டம் இந்திய அணிக்குத் தான்.

Indian Team

ஆனாலும் பங்களாதேஷை வாஷ்-அவுட் செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த தொடர் நிறைவு பெரும் நிலைக்கு வந்து விட்ட நேரத்தில் , அடுத்தடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கிறது. இம்மாதம் பதினாறாம் தேதி துவங்குகிறது இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி.

தர வரிசையில் சற்று பின் தங்கியே இருந்தாலும் பல சர்வதேச தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு இந்த அணி மிகப்பெரிய காரணியாக அமைந்திருக்கிறது கடந்த நாட்களில்.

2019ம் ஆண்டு நடந்து முடிந்து உலக் கோப்பை போட்டியில் கோப்பை வெல்லும் அணியாக அதிகம் எதிர்பார்க்கபட்ட இந்திய அணியின் கணவினை அரை-இறுதிப் போட்டியில் தகர்த்து எறிந்தது. அதே போல தான் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை இந்தியா அடைய முடியாமல் போனதற்கு இந்த அணி மிகப்பெரிய காரணமாகவும் இருந்தது. ஆகவே இந்த இரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டிகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. கடந்து இரண்டு முறையான ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது தொடரினை வென்றுள்ள இந்திய அணி, மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன தான் இரண்டு முறை வீழ்த்தியிருந்தாலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து எதிர்கொள்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது. இந்த தொடருக்கு அடுத்து இந்தியாவில் ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் இந்தியாவை எதிர்கொள்ள வருகை தர இருக்கிறது.

இப்படி பலம் கொண்ட அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற இருப்பது இந்திய அணிக்கு சவாலை அதிகரிக்கும் எனவே பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டின் மூன்று வித தர வரிசைகளில் முன்னிலை பெற்று வரும் இந்திய அணி, உலகின் எந்த நாட்டு கிரிக்கெட் அணியையும் எளிதாக எதிர்ககொள்ளும் பலமிக்க அணியாகவும் பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ அடுத்த நான்கு, ஐந்து மாதங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விளையாட்டு விருந்து காத்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago