latest news
திகைக்க வைத்த திடீர் காற்று…திசை மாறிய திண்டுக்கல்…
தமிழகத்தின் தட்ப வெட்ப சூழ்நிலையில் திடீர், திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன மழை முதல் மிதமானது வரையிலான மழை பொழிவு இருந்து வந்தது. நீலகிரியில் மிகக் கடுமையான மழை பெய்தது. இயலபு வாழக்கை முற்றிலுமாக பாதிக்கும் அளவில் இந்த மழை பொழிவு இருந்து வந்தது.
பொதுவாகவே ஆடி மாதம் துவங்கிவிட்டாலே தமிழகம் வீசும் தரைக்காற்றின் அளவும் அதிகரித்தே இருக்கும். முன் காலத்தில் ஆடி மாத காற்று குறித்து பேசும் போது ‘ஆடிக் காற்றில் அம்மிக்கல்லும் நகரும்’ என குறிப்பிடுவார்கள். நாகரீக வளர்ச்சியின் காரணமாக அம்மிக்கல் காணாமல் போனலும் ஆடி மாதத்தில் வீசும் காற்று மட்டும் அப்படியே இருந்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
அதிகரித்துள்ள இந்த காற்றின் வேகத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் திடீரென சூறைக்காற்று வீசத்துவங்கியது. யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென வீசிய இந்த காற்றால் நகர வாசிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
சாலையில் சென்றவர்களின் கண்களில் மண்ணை வாரி இறைத்தது. இதனால் சிறிது நேரம் விபத்து ஏற்படும் அபாயமும் நீடித்தது. நகரின் முக்கியப்குதியில் வீசிய இந்த திடீர் சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் நிலை காணப்பட்டது. ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த பேனர்கள் காற்றில் பறக்கத் துவங்கியது. சில நிமிடங்கள நீடித்த இந்த திடீர் சூறாவளியால் திகைத்துப்போனது திண்டுக்கல்