ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஜாமீன் கேட்டபோது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்து வந்த நிலையில் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் பலன் அளிக்கவில்லை. மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்வதற்காக ஜாமின் கேட்ட போதும் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் உயர்நீதிமன்றத்தில் புது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த அந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் ஜாமீன் வழங்கி விடுதலை செய்ததது. இதையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
தற்போது ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்று இருக்கின்றார். அவர் சிறையில் இருந்த போது சம்பா சோரன் முதல்வராகப் பதவி வகித்து வந்த நிலையில் நேற்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து வழங்கி இருந்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இன்று ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஹேமன் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…