Connect with us

latest news

ஆள் மாறாட்டமே நடக்குது… ஆனா தாலியை மட்டும் கழட்ட சொல்றீங்க… நீட் தேர்வு குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம்…!

Published

on

நீட் தேர்வில் ஆள் மாறாட்டமே நடக்குது ஆனால் தாலியை மட்டும் கழட்டி வைக்க சொல்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கின்றது.

2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆள் மாறாட்டத்திற்கு இடைத்தரகர்கள் பலரும் உதவியதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டி இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றது.

மேலும் வட மாநிலங்களில் தமிழ் மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இருப்பதற்கும், சிபிசிஐடி போலீசார் புகார் குறித்து தேசிய தேர்வு முகமை பதிலளிக்கும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த புகார் நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் 2019 ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடந்த போது வெளிநாட்டில் இருந்த மாணவர்களுக்காக இங்கு மூன்றும் மையங்களில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்களின் தாலியை கூட கழட்டி வைக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் இப்படி ஆள்மாறாட்டம் நடந்தது பற்றி எதுவுமே என் விசாரிக்கப்படவில்லை, இது குறித்து தேசிய தேர்வு முகமை பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version