Connect with us

Finance

எகிறி அடிக்கும் கோல்ட் ரேட்…ஆசையெல்லாம் ஆகிவிடுமா க்ளீன் போல்டு?…

Published

on

Gold

செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் காணப்பட்டே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனை விலையில் ஏற்ற, இறக்கங்களோடு இருந்து வருகிறது. அதிலும் தமிழ் மாதமான புரட்டாசி துவங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே தங்கத்தின் விலையை தீர்மானித்து வருகிறது. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது, வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்பட்டது நகை பிரியர்களை அதிர வைத்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆபரணப்பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்த்தின் ஒரு கிராம் விலை ஏழாயிரத்து அறுபது ரூபாயாக (ரூ.7,060/-)உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஆறாயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்படுகிறது.

Ornament

Ornament

கடந்த சில நாட்களாகவே எகிறியடித்து வரும் தங்கத்தின் விலை இன்று  ஒரு கிராம் ஏழாயிரம் ரூபாயையும் (ரூ.7,000/-) கடந்து சென்றுள்ளது தங்கம் வாங்க நினைப்பவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றின் விலை இன்று நூற்றி ஓரு ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-)உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு பேரிடியாக உணரப்படுகிறது.

google news