ஆயுத பூஜை முடிந்த நிலையில் ஆப்பு வைத்த தங்க விலை…அதுக்காக இப்படியா?…

தங்கம் நாளுக்கு நாள் தனது மாஸை காட்டிக் கொண்டே வருகிறது அதன் விலை உயர்வின் மூலம். திருமணம் போன்ற விஷேசங்களில் தங்கம் என்றுமே முதன்மை பெற்றும் வருகிறது. அதிலும் குறிப்பாக சீர் வரிசைகள் செய்ய நேரிடும் போது தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விடுகிறது. இதனால் தங்கத்தின் விலையின் மீது தனி கவனம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகிறது.

தினசரி தங்கத்தின் விலையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?, என யோசிக்க வைத்து விடுகிறது சமீப நாட்களாக, ஒரு நாள் விலை உயர்வு, மறு நாள் குறைவு என்பது இருந்தாலும், ஏறிய விலை படிப்படியாக அதிகரித்து அதிர்ச்சியை தந்து விடுகிறது. ஆனால் குறைவின் போது அத்த சொர்ப்பமாகவே காணப்படுகிறது. கடந்த வாரத்தில் இது போன்ற நிலையை தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது தங்கத்தின் விற்பனை விலையினை கூர்மையாக கவனித்துப் பார்க்கும் போது.

நேற்று தடாலடியாக உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது தங்கத்தின் விலை, நானும் சலைத்தவன் அல்ல என வெள்ளியும் வெகுன்டு எழுந்து உயர்வின் பாதையில் சென்றது. நேற்று கிராம் ஒன்றிற்கு எழுபது (ரூ.70/-)ரூபாய் உயர்ந்திருந்தது தங்கம், வெள்ளியும் கிராமிற்கு இரண்டு ரூபாய் உயர்ந்தது. இன்று அதே போல விலை உயர்வு ஏற்றத்திலேயே தொடர்ந்து வருகிறது. சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று நேற்றை விட கிராமிற்கு இருபத்தி ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது.

ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ. 7,095/-) விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் இந்த விலை உயர்வினை அடுத்து ஏழாயிரத்து நூற்றி இருபது ரூபாய்க்கு (ரூ.7,120/-) விற்கப்ப்ட்டு வருகிறது.

Jewel

சவரன் ஒன்று நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து எழனூற்றி அறுபது ரூபாய்க்கு (ரூ.56,760/-)விற்பனையான நிலையில் இன்று இருனூறு ரூபாய் (ரூ.200/-) உயர்ந்து, ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.56,960/-) விற்கப்படுகிறது.

விலை அதிகரிப்பை கொடுத்து தலைவலியை ஏற்படுத்தி வரும் தங்கத்தினைப் போலவே வெள்ளியும் வேதனை தருகிறது. கிராம் ஒன்று நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் (ரூ.1/-) உயர்வை சந்தித்து நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ103/-) விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்றை விட ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) அதிகரித்து ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

sankar sundar

Recent Posts

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

1 min ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago