Connect with us

Finance

தலை தூக்கும் விலை உயர்வு!…கட்டுக்குள் வருவது எப்போது?…தங்கம் வெள்ளி விலை நிலவரம்…

Published

on

Gold

தங்கத்தின் விலையை சர்வதேச பொருளாதார நிலையும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான் தீர்மானித்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் தடாலடி விலை இறக்கத்தை சந்தித்தது.

வெள்ளிக்கிழமையன்று விற்கப்பட்ட அதே விலையில் தான் தங்கம் கடந்த சனிக்கிழமையன்று விற்கப்பட்டது. நேற்றும் மாற்றம் ஏதுமின்றி அதே நிலை தான் நீடித்தது. இந்நிலையில் வாரத் துவக்க நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று முப்பது ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ஆறாயிரத்து ஐனூற்றி ஐம்பது ரூபாய்க்கு (ரூ.6550/-) விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விற்பனை விலை இன்று ஐம்பத்தி இரண்டாயிரத்து நானூறு ரூபாய்கு (ரூ.52,400/-) விற்கப்படுகிறது.

Jewel

Jewel

தங்கத்தின் விலை ஏறுமுகத்திற்கு இன்று மாறியது போல தான் வெள்ளியும் விற்பனை விலையில் மாற்றத்தினை கொடுத்துள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஓரு ரூபாயாக(ரூ.91/-) உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஓறாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலான் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வந்து தங்கத்தின் விலை இப்பொது மீண்டும் உயர்வு நிலையை நோக்கி தலை தூக்கி வருகிறது. இது ஆபரணப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலை எப்போது கட்டுக்குள் வந்து இறங்கு முகத்திற்கு எப்போது வரும் என்கின்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. வெள்ளியின் விலையிலும் சிறு, சிறு மாற்றங்கள் இருந்து வருவதும் வணிகர்களிடையே சிறிய பாதிப்பை கொடுத்துள்ளது.

google news