Finance
இன்னைக்கு என் ரேஞ்சே வேற…கெத்து காட்டிய தங்கம் விலை…
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருவது நடுத்தரவாசிகளை அதிகமாக கவலைக்கு ஆளாக்கி வருகிறது. இந்த மாதத்தின் துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை பலமுறை உயர்வுப் பாதையிலேயே பயணித்து வருகிறது. விலை ஏற்றத்தில் இருந்த வேகம், இறங்குமுகத்திற்கு வந்த நேரத்தில் இல்லை என்றே தான் சொல்லியாக வேண்டும். இன்று தங்கத்தின் விற்பனை விலையில் ஏற்றம் இருக்கிறது.
சென்னையில் நேற்று விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏழாயிரத்து முன்னூறு ரூபாயாக (ரூ.7,300/-) இருந்தது. அதே போல ஒரு சவரன் தங்கத்தின் விலையும் ஐம்பத்தி எட்டாயிரத்து நானூறு ரூபாயாக (ரூ.58,400/-) இருந்தது.
நேற்றைவிட இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் கிராமிற்கு நாற்பது ரூபாய் கூடியிருக்கிறது (ரூ.40/-). இந்த உயர்வின்படி இன்று ஒரு கிராமின் விலை ஏழாயிரத்து முன்னூற்றி நாற்பது ரூபாயாகவும் (ரூ.7,340/-), ஒரு சவரன் ஐம்பத்தி எட்டாயிரத்து எழனூற்றி இருபது ரூபாயாகவும் (ரூ.58,720/-) உள்ளது.
இந்த வாரம் துவக்கத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்த உயர்வு தொடரும் பட்சத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை அறுபது ஆயிரத்தை அடைந்து விடுமோ? என்ற அச்சம் ஆபரணப்பிரியர்கள் மனதில் இப்போதே எழத்துவங்கியுள்ளது.
தங்கத்தின் விலை ஒரு பக்கம் தடாலடியாக உயர்ந்து வர வெள்ளியும் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. வெள்ளி நேற்று ஒரு கிராம் நூற்றி பத்து (ரூ.110/-) ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.
ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயாக (ரூ.1,10,000/-) இருந்த நிலையில் இன்று கிராமிற்கு இரண்டு ரூபாய் (ரூ.2/-) உயர்ந்து நூற்றி பன்னிரெண்டு ரூபாய்க்கு (ரூ.112/-) விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தினால் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் ரூபாயாக (ரூ.1,12,000/-) உள்ளது.