கிரிக்கெட் போட்டி சர்வதேச அளவில் மூன்று வடிவங்களாக நடத்தப்பட்டு வருவது உலகறிந்த ஒன்று தான். ஆனால் ஹாங்காங் நாட்டில் நடத்தப்படும் ஹாங்காங் சிக்சஸ் போட்டி மீண்டும் தலை காட்ட உள்ளது. ஐம்பது ஓவர் உலகக் கோப்பை வென்றுக் கொடுத்த இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன் தோனி உட்பட சச்சின், ராபின் சிங், அனில் கும்ளே உள்ளிட்ட பிரபலங்கள் இந்த தொடரில் ஆடியிருக்கிறார்கள்.
1992ம் ஆண்டு தொடங்கி 2017ம் ஆண்டு வரை ஆடப்பட்டு வந்த இந்த விதமான கிரிக்கெட் போட்டி தொடர் இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியை விட இதில் பரபரப்பு அதிகமாக இருக்கும் எனக்கூட சொல்லலாம். இந்த போட்டிக்கான விதிமுறைகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் காரணத்தால்.
ஹாங்காங் சிக்சஸ் தொடரின் ஸ்பெஷாலிட்டி என்ன வென்று தெரியுமா?. ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே ஆட முடியும். ஒரு அணிக்கு 5 ஓவர்கள்தான் வழங்கப்படும். அணியின் விக்கெட் கீப்பரை தவிர அத்தனை வீரர்களும் பந்துவீச வேண்டும். லீக் போட்டியில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள்தான். அதேநேரத்தில் இறுதிப்போட்டியில் ஒரு ஓவருக்கு 8 பந்துகள். அதேமாதிரி, ஒரு பேட்டர் 31 ரன்கள் எடுத்துவிட்டால் அவர் ரிட்டையர்ட் ஆகிவிட வேண்டும்.
அணியின் எல்லா வீரர்களும் அவுட் ஆன பிறகு அவர் மீண்டும் பேட்டிங் ஆடலாம். அணிக்கு 6 வீரர்கள் எனில் 5 வீரர்கள் அவுட் ஆனவுடன் வழக்கமாக இன்னிங்ஸ் முடிந்துவிட வேண்டும். ஆனால், இங்கே அந்த கடைசி வீரரும் தனியாக நின்று பேட்டிங் ஆடலாம், அதேமாதிரி ஒய்டு, நோ – பால் போன்ற எக்ஸ்ட்ராக்களுக்கு 2 ரன்கள் வீதம் வழங்கப்படும். ஒய்டு மற்றும் நோபால் பந்துகள் 2 ரன்களாக கருதப்படும்.
இது மாதிரியான சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளிலிருந்து மாறுபட்டு இருப்பதால், இதன் விறுவிறுப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும்.மொத்தம் இருபத்தி ஒன்பது போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 12 அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது .
ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் தங்களுக்குள் மோதிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகளைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பின்னர் வெற்றிகளின் அடிப்படடையில் அடுத்த அடுத்த சுற்றுகளுக்கான தகுதி கிடைக்கும்.
கிரிக்கெட் விளையாட்டின் மிகக் குறுகிய வடிவம் கொண்ட போட்டி இது. நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி துவங்க உள்ள இந்த ஹாங்காங் சிக்சஸ் தொடர் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
சர்வதேச அங்கீகாரம் கிடைக்காததால், உள்ளூர் கிரிக்கெட் போட்டியாகவே இதில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதே போல சிறப்பான பொழுது போக்கு தொடராகவும் இது அமையும், நேரம் செல்வதே தெரியாத அளவில் போட்டி சுவாரஸ்யம் கொண்டதாகவே இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…