govt update news
ஒரே மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டை இணைக்கலாம்… உங்களுக்கு தெரியுமா..? இதோ தெரிஞ்சுக்கோங்க..!
ஒரே மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டை நாம் இணைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஆதார் கார்டு என்பது ஒரு இந்திய குடிமகனின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றது. வெறும் அடையாள ஆவணமாக மட்டும் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் சிம்கார்டு வாங்குவது வங்கி தொடர்பான பணிகளுக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமாகின்றது. இப்படி அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் ஆதார் கார்டில் மொபைல் எண் இணைப்பது என்பது மிகவும் அவசியம்.
ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பல பணிகளுக்காக தேவைப்படும் இந்த அடையாள ஆவணத்தில் ஒவ்வொருவரும் தங்களின் மொபைல் நம்பரை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறித்து தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
ஆதார் கார்டு அனைத்து விதமான சேவைகளுக்கும் பயன்படுவதால் ஒவ்வொரு முறையும் ஓடிபி சரிபார்ப்பு செயல்முறை செய்வதற்கு ஆதார் கார்டுடன் நமது மொபைல் எண்ணை இணைத்து இருப்பது என்பது அவசியமான ஒன்று. ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் ஆதார் கார்டையும் ஒரே ஒரு மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். அதாவது ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, குழந்தைகள் என்று நான்கு முதல் ஐந்து பேர் இருக்கும் வகையில் அவர்கள் ஒரே ஒரு குடும்பத் தலைவரின் மொபைல் நம்பரை நம்மால் இணைக்க முடியும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யூஐடிஏஐ ஒரே மொபைல் என்னுடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்று கூறியிருக்கின்றது. குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினரின் மொபைல் எண்ணை ஆதார் இணைப்பிற்காக பயன்படுத்தலாம். ஏனென்றால் மொபைல் நம்பரை ஆதார் கார்டு இணைப்பதால் ஆன்லைன் சேவைகளுக்கு தேவையான otpகளை பெறுவதற்கு அது பயன்படும்.
ஒரே நம்பரை ஆதார் கார்டுக்கு பயன்படுத்துவதால் கார்டுதாரரிடம் போன் இல்லை என்றாலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணை பயன்படுத்தி நாம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள முடியும். ஒரே எண்ணை ஆதாருடன் இணைப்பதால் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உதாரணமாக ஒரே மொபைல் நம்பரை கொடுத்து ஆதார் கார்டை இணைத்த பிறகு ஏதேனும் சேவைக்காக ஒரே நேரத்தில் இருவருக்கு ஓடிபி தேவைப்பட்டால் அதில் சிக்கல் ஏற்படும் காலதாமதத்தையும் கொடுக்கும்.