Connect with us

latest news

உண்டியல், அம்மன் நகைகள்தான் குறி… உண்டியல் திருடன் சுகுன்ராஜை வளைத்தது எப்படி?!

Published

on

புதுச்சேரியில் ஆறுக்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியலை உடைத்து மற்றும் அம்மன் நகைகளைத் திருடிய பிரபல உண்டியல் திருடன் சுகுன்ராஜை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை முல்லை நகரில் பிரசித்தி பெற்ற உலக நாயகி அம்மன் கோயில் உள்ளது. கடந்த மே 31-ம் தேதி இரவு பூஜைகள் முடித்து வழக்கம் போல கோயிலைப் பூட்டினர். மறுநாள் காலை பூசாரி இளந்திரையன் கோயிலைத் திறந்தபோது கோயில் அலுவலகப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அலுவலக பீரோ, லாக்கரில் இருந்த அம்மன் நெக்லஸ், கம்மல் உட்பட 5 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. கோயில் கருவறை கதவையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

உருளையன்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உலகநாயகி அம்மன் கோயிலையும் சேர்த்து தொடர்ந்து 5 கோயில்களில் உண்டியல் காணிக்கை மற்றும் கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீஸார் கைரேகை பதிவுகள், சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

விசாரணையில், உருளையன்பேட்டை சுற்றுவட்டாரக் கோயில்களில் கைவரிசை காட்டியது கடலுார் கூத்தப்பாக்கம், முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த சுகுன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலத்தில் பதுங்கியிருந்த சுகுன்ராஜைக் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அப்போது, கோயிலில் கம்பி வேலிக்குள் புகுந்து திருடியது எப்படி என்பது குறித்து போலீஸார் முன்னிலையில் சுகுன்ராஜ் நடித்துக் காட்டியதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *