Connect with us

govt update news

ரேஷன் கார்டில் இது ரொம்ப முக்கியம்… இல்லனா எதுவுமே கிடைக்காது… எப்படி அப்டேட் செய்வது..?

Published

on

ரேஷன் கார்டில் உங்களின் செல்போன் நம்பரை எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ரேஷன் கார்டு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கார்டு மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவான விலையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பொதுமக்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவி வழங்கப்படுகின்றது.

அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, உப்பு, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களும் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றது. இது தவிர ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவியும் கிடைக்கின்றன. அரசு சார்ந்த நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. ஆதார் கார்டு, பான் கார்டு போன்று ரேஷன் கார்டும் மிக முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றது.

உங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண் இருப்பது என்பது மிக அவசியம். எனவே ரேஷன் கார்டில் உங்களின் அதிகாரப்பூர் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பது என்பது மிகவும் முக்கியம். உங்கள் ரேஷன் கார்டு பழைய மொபைல் நம்பரோ அல்லது தவறான மொபைல் நம்பரோ இருந்தால் உங்களுக்கு சரியாக மெசேஜ் வராது. அது மட்டும் இல்லாமல் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

எனவே ரேஷன் கார்டில் சரியான மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். சில நேரங்களில் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். மொபைல் நம்பர் புதுப்பிக்காவிட்டால் ஓடிபி கிடைக்காது. இதனால் அரசாங்கத்திட்டங்களின் கீழ் எந்த பலன்களையும் பெற முடியாது. எனவே ரேஷன் கார்டில் தவறான அல்லது நிறுத்தப்பட்ட மொபைல் நம்பர் இருந்தால் அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை எளிதாக புதுப்பிக்கலாம் ரேஷன் கார்டு தொடர்பான பல்வேறு அப்டேட்கள் ஆன்லைனில் இருப்பதால் மொபைல் எண்ணை புதுப்பிக்க நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை. மிக சுலபமாக ரேஷன் கார்டில் உள்ள உங்கள் மொபைல் ஃபோனை மாற்றிக்கொள்ள முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரேஷன் கார்டு சேவைக்கான தனி இணையதளம் இருக்கின்றது.

எனவே அந்த இணையதளத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும், அப்டேட் செய்யவும் முடியும். மேலும் உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ரேஷன் வெப்சைட்டில் இதற்கு நீங்கள் செல்ல வேண்டும். அதில் சிட்டிசன் கார்னர் என்று பிரிவிருக்கும் அதில் மொபைல் எண்ணின் பதிவு மாற்றம் என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும். இப்போது குடும்ப தலைவரின் NFS ஐடியை உள்ளிடவும். பிறகு ரேஷன் கார்டு எண்ணை பதிவிடவும். ரேஷன் கார்டின் குடும்ப தலைவரின் பெயரை உள்ளிடவும். அடுத்து உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேவ் கொடுக்கவும். இப்போது உங்கள் புதிய மொபைல் எண் உங்கள் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டிருக்கும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *