கூகுள் பே-வில் தெரியாமல் வேறு யாருக்காவது பணம் அனுப்பிட்டீங்களா..? திரும்ப பெற இதோ எளிய வழிமுறை…!

கூகுள் பே-வில் தெரியாத நபருக்கு நீங்கள் பணம் அனுப்பிவிட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம் அதை திரும்ப பெற எளிய வழிமுறை இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் போன் பே மற்றும் கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது என்பது மிகவும் எளிமையாகி விடுகின்றது.

அதிலும் மக்கள் ஒரு பெட்டிக்கடைகளில் தொடங்கி பெரிய பெரிய மால்கள் என அனைத்திலும் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் தாக்கம் பெரிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இருக்கின்றது. இந்த யுபிஐ செயலிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மக்கள் வங்கிக்கு செல்வது ஏடிஎம் மையங்களை தேடி செல்வது போன்றவை குறைந்து கொண்டு வருகின்றது.

எந்த ஒரு சிறிய பொருளை வாங்கினால் கூட ஸ்கேன் செய்துவிட்டு பணத்தை அனுப்பி விடுகின்றனர். இதனால் சில்லறை பிரச்சினை மட்டுமில்லாமல் நேரமும் மிச்சம் ஆகின்றது. இப்படி நாம் பணத்தை அனுப்பும் போது சில சமயம் தெரியாமல் வேறு ஒரு நபருக்கு பணத்தை அனுப்பிவிடலாம் அதனை திரும்ப எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பெயரில் தவறான பண பரிமாற்றம் செய்தால் 24 முதல் 48 மணி நேரத்தில் உங்கள் பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பணம் பெறுவோர் மற்றும் செலுத்துவோர் இருவரும் ஒரே வங்கியாக இருந்தால் விரைவில் பணத்தை திரும்ப பெற முடியும். ஆனால் இரண்டு வங்கி கணக்குகளும் வேறு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தை பெற அதிக நேரம் எடுக்கும்.

பணம் தவறாக அனுப்பியவரை நீங்கள் தொடர்பு கொண்டு பயனில்லை உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். நீங்கள் தவறாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற சில வங்கிகள்  transaction re-call என்ற அம்சத்தை பயன்படுத்துகின்றது. இதில் ஏதோ ஒரு வழிமுறையை பயன்படுத்தி உங்களது பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கின்றது.

அதற்கு npci.org.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று What we do பக்கத்திற்கு சென்று யுபிஐ தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவர்த்தனை குறித்த விவரங்களை பதிவிட வேண்டும்.

பிறகு புகார் பெட்டியில் யுபிஐ படிவத்தினை ஐடி வங்கி பெயர்,  விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதை செய்தால் சில மணி நேரத்தில் உங்களது பணம் திரும்ப வந்துவிடும்.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago