நமது உடலுக்கு கொழுப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட கொழுப்பு நமது உடலுக்கு நன்மை தரகூடியதாக இருக்க வேண்டும். என்வே அப்படியான கொழுப்பை நமது உடலில் பராமரிப்பது மிகவும் கடினமான செயலாகும். ஏனென்றால் இந்த தீமை தரகூடிய கொழுப்பினால் நமக்கு உடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த தேவையற்ற கொழுப்பு நமது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இந்த கொழுப்பானது சமநிலையில் இல்லாவிட்டால் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்(LDL) கொழுப்பு சுரப்பினை அதிகரிக்க செய்யும். இந்த கொழுப்பானது நமது உடலுக்கு கேடாக அமையும். கீழ்காணும் உணவு வகைகளை நாம் தினசரி உணவில் சேர்ப்பதனால் நமது உடலில் தேவையற்ற கொழுப்பு உண்டாவதை தடுக்க செய்து நமது உடலை ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.
பூண்டு மற்றும் வெங்காயம்:
வெங்காயம் மற்றும் பூண்டு நமது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாகும். பூண்டில் உள்ள அல்லிசின் எனும் வேதிபொருளும் வெங்காயத்தில் உள்ள குவார்சிடின் எனும் வேதிபொருளும் சேர்ந்து லிப்போபுரோட்டீன் எனும் கெட்ட கொழுப்பை கரைய செய்கிறது. இந்த இரண்டு பொருள்களை சேர்ப்பதால் நன்கு சுவையை தருவது மட்டுமல்லாமல் நமது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
பாதாம் மற்றும் தயிர்:
பாதாம் பருப்பில் மோனோசாச்சுரேட்டேட் கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இது இதய பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் LDL எனப்படும் கெட்ட கொழுப்பினையும் குறைக்கிறாது. மேலும் நாம் உண்ணும் தயிரில் வெறும் 4 சதவீதம் மட்டுமே கொழுப்பு இருப்பதாலும் மேலும் இதில் உள்ள நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களும் நமது உடலின் செரிமான தன்மையை நன்கு அதிகரிக்க செய்கிறது.இந்த இரண்டு பொருட்களையும் நாம் காலை உணவாக சேர்ப்பதால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
கிரீன் டீ மற்றும் எழுமிச்சை:
கிரீன் டீ என்பது உனகளாவிய அளவில் அதிகமாக பருகப்படும் ஒரு வகை பானமாகும். மேலும் இதில் உடலுக்கு தேவையான ஆண்டிஆக்ஸிடெண்ட் இருப்பதால் இது நமது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பினை கரைய செய்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள ஃப்லேவனாய்டு எனும் வேதி பொருளும் நமது உடலுக்கு நன்மை பயக்கிறது. மேலும் நமக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை வரவிடாமல் தடுக்கிறது.
மஞ்சள் மற்றும் மிளகு:
மஞ்சள் பொதுவாக இந்தியர்களின் அனைத்து உணவுகளிலும் சேர்க்கக்கூடிய ஒரு பொருளாகும். இதன் ஆண்டி-இன்ஃப்லமேட்டரி தன்மை நமது உடலின் கொழுப்பினை குறைக்ககூடியது. தொடர்ந்து 12 வாரங்கள் மஞ்சள் மற்றும் மிளகினை உணவில் சேர்ப்பதால் நமது உடலின் கெட்ட கொழுப்பினை கரைய செய்யும்.
எனவே இப்படியான உணவு பொருட்களை உண்டு நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…