Connect with us

Cricket

உலக கோப்பை 2023: இந்தியா-பாகிஸ்தான் உள்பட 9 போட்டி தேதிகள் மாறிடுச்சி.. ஐ.சி.சி. அதிரடி..!

Published

on

Ind-vs-Pak-featured-Img

உலக கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இந்திய போட்டி தேதியுடன் எட்டு இதர போட்டிகளின் தேதி மாற்றப்பட்டு இருப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இத்துடன் திருத்தப்பட்ட புதிய தேதிகள் பற்றிய அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்துடன் எட்டு இதர போட்டிகளின் தேதியும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டியும் அடங்கும். முன்னதாக நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி நவம்பர் 12 ஆம் நடைபெற இருக்கிறது.

Ind-vs-Pak

Ind-vs-Pak

“அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வேறொரு நாளுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதோடு எட்டு இதர போட்டிகளின் தேதியும் மாற்றப்பட்டு இருக்கின்றன,” என்று ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக ஆமதாபாத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அதே இடத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

ICC-worldcup-matc-reschedule

ICC-worldcup-matc-reschedule

இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 14 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையே அக்டோபர் 12 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி, தற்போது அதே இடத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 13 ஆம் தேதிக்கு மாற்றாக அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதே போன்று நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயா போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது இதன் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி நவம்பர் 11 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

google news