பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 மூலமாக வீடு இல்லாதவர்களுக்கு அரசு கடன் வழங்குகின்றது. இந்த திட்டம் குறித்து ஒரு முக்கிய தகவலை தெரிந்து கொள்வோம்.
ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்கும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் குடியிருக்க வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு சொந்தமாக வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கியமான தகவல் ஒன்று குறித்து இதில் பார்ப்போம்.
அனைவரும் பிஎம்ஏ திட்டத்தின் வாயிலாக வீடு கட்டி வருகிறார்கள். நிரந்தர வீடு இல்லாத தகுதி உள்ள பொதுமக்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலமாக பலன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் வாயிலாக வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கப்படுகின்றது, இந்நிலையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வழங்கப்படும் மானியம் திரும்ப பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் அரசின் முக்கியமான திட்டமாக எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மூன்று கோடி வீடுகள் கூடுதலாக கட்டி தருவதற்கு அரசு முடிவு செய்து இருக்கின்றது. இந்த திட்டத்தில் யாருடைய மானியம் எல்லாம் திரும்ப பெறப்படும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சில காரணங்களால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு இருந்தால், அந்த பயனாளிகளின் மானியம் திரும்பப் பெறப்படும். மேலும் கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவருடைய கணக்கு என்பிஏ-ஆக இருந்தால் அவருடைய மானியமும் திரும்ப பெறப்படும். ஒரு வருடத்திற்குள் வீடு கட்டப்படுவதற்கு தொடர்பான சான்றிதழ் சமர்ப்பிக்காவிட்டால் அவரின் கடன் மானியமும் திரும்ப பெறப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற LIG பிரிவினரை சார்ந்தவராக இருந்தால் அவர்களின் ஆண்டு வருமானம் 3 முதல் 6 லட்சம் வரை தான் இருக்க வேண்டும். மூன்று லட்சத்தை தாண்டி இருக்கக் கூடாது. மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பலனடைய விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாகவும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் பெயரில் இதற்கு முன்பாக எந்த ஒரு வீடோ அல்லது அவர்களது குடும்பத்தில் இருக்கும் யாரும் அரசு பணியிலோ இருக்க கூடாது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று திறக்கப்பட்டது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…