Cricket
8வது சீசன் TNPL… ஆதிக்கம் செலுத்திய கோவை மற்றும் நெல்லை அணிகள்…
தமிழக அணிகள் விளையாடும் 8வது சீசன் டிஎன்பிஎல் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடந்தது.
முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சேப்பாக் அணி 6 விக்கெட் இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய நெல்லை அணி மீதம் ஒரு பந்து இருக்கும் நிலையில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அடுத்து 7.15 மணிக்கு சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடந்த போட்டியில்லைகா கோவை கிங்ஸ் அணியை ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற கோவை பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் 160 ரன்கள் எடுத்து இருந்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணியின் நடராஜன் மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதை தொடர்ந்து கேப்டன் விஜய் சங்கர் மற்றும் துஷார் ரஹேஜா திருப்பூர் அணியின் ரன்களை மெல்ல உயர்த்தினர். ஆனாலும் விஜய் சங்கர் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இப்போட்டியின் கடைசி 2 ஓவர் பெரிய பரபரப்பை உருவாக்கியது. 19வது ஓவரை கேப்டன் ஷாருக்கான் வீச மூன்று ரன்கள் மட்டுமேகொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதனால் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்றது திருப்பூர் அணி.
ஆனால், முகமது வீசிய ஐந்தாவது பந்தை அஜித்ராம் நான்கு ரன்களை தட்டினார். ஆட்டத்தின் கடைசி பந்தை அடித்து ஆட கணேஷ் முயற்சி செய்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.