Connect with us

Finance

உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…

Published

on

gold

தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.

தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.

நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி  என்பதாகவும் (ரூ.56,880/-)  இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Silver

Silver

இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.

google news

Finance

கூடியது ரூபாய் பத்து…உயர்வு திசையில் வீசுது தங்கத்தின் காற்று..

Published

on

Gold

தங்கத்தின் மீதான மோகமும், அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சக்திகளாக இருந்து வருவது சர்வதேச பொருளாதார நிலையும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  இறக்கத்தை சந்தித்து வந்த தங்கதத்தின் விற்பனை விலை, நேற்று முதல் தடாலடியாக உயரத்துவங்கி வருகிறது.

நேற்று ஒர நாளில் கிராமுக்கு ஐம்பது ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்கப்பட்டது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம்.

Silver

Silver

ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூறு ரூபாயாக இருந்தது(ரூ.56,800/-). நேற்றைப் போலவே இன்றும் தங்கத்தின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றை விட இன்று கிராமிற்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது.

கிராம் ஒன்றின் விலை இன்று ஏழாயிரத்து நூற்றி பத்து ரூபாயாக (ரூ.7,110/-) உள்ளது. சவரன் ஒன்றின் விலை இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி எட்டாயிரத்து என்னூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,880/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ஆறாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.56,800/-) விற்கப்பட்டது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்வுப் பாதையிலேயே இருந்து வருவது நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வெள்ளி கடந்த இரண்டு நாட்களாகவே அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. நேற்று நூற்றி ஓரு ருபாயாக (ரூ.101/-) இருந்த ஒரு கிராம் இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) உள்ளது.

 

 

 

google news
Continue Reading

Finance

ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…

Published

on

Gold

நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட  இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம் கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து ஐம்பது ரூபாய்க்கு (ரூ.7,050/-) விற்கப்பட்டது, ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.56,640/-)   விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இருநூற்றி நாற்பது ரூபாய் (ரூ.240/-)குறைந்து, ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாயக்கு (ரூ.56,400/-) விற்கப்பட்டது நேற்று.

Silver

Silver

கடந்த இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் இருந்து வந்த தங்கத்தின் சென்னை விற்பனை விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

விலை குறைவு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது, ஏற்றத்தில் சென்றுள்ள விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நேற்றை விட கிராம் ஒன்றிற்கு இன்று ஐம்பது ரூபாய் (ரூ.50/-) உயர்ந்து, ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு சவரன் நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் (ரூ.56,400/-) இன்று நானூறு ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.56,800/-) விற்கப்பட்டு வருகிறது.  தங்கம் ஒரே நாளில் ஓரவஞ்சனை காட்டி உயர்வை நோக்கி சென்றாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை.

நேற்று கிராம் ஒன்று நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தான் இருந்து வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருக்கிறது இன்று. உயர்வினை நோக்கி தங்கம் விலை சென்றுள்ளது நகைப்பிரியர்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது.

google news
Continue Reading

Finance

குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

Published

on

Gold

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விற்பனை விலையில் நாள் தோறும் மாற்றங்கள் காணப்படும் நிலை இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகறது. சடங்குகளில் வழங்கப்படும் முக்கியத்துவத்தின் காரணத்தால் இதற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கிராம் ஒன்று ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) விற்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது விலை. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலேயே காணப்பட்ட தங்கம் திங்கட்கிழமையான இன்று இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.

கிராம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம் இன்று.

Silver and Gold

Silver and Gold

ஒரு கிராம் ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7.095/-) விற்கப்பட்டு வந்த நிலையில் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து இன்று ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனையாகிறது. சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையாகி வருகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்க்கு பத்து காசுகள் குறைந்து நூறு ரூபாய் தொன்னூறு காசுகளுக்கு (ரூ0.90/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து தொல்லாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,00,900/-) விற்கப்படுகிறது இன்று.

கடந்த சில நாட்களாகவே விலை உயர்வை சந்தித்து அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று இறங்கமுகத்திற்கு வந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை குறைவு தொடருமா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆபரணப்பிரியர்கள் மத்தியில்.

 

 

 

google news
Continue Reading

Finance

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

Published

on

Gold

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.

நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.

Silver

Silver

ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

Finance

எகிறி அடிக்கும் கோல்ட் ரேட்…ஆசையெல்லாம் ஆகிவிடுமா க்ளீன் போல்டு?…

Published

on

Gold

செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் காணப்பட்டே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனை விலையில் ஏற்ற, இறக்கங்களோடு இருந்து வருகிறது. அதிலும் தமிழ் மாதமான புரட்டாசி துவங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே தங்கத்தின் விலையை தீர்மானித்து வருகிறது. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது, வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்பட்டது நகை பிரியர்களை அதிர வைத்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆபரணப்பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்த்தின் ஒரு கிராம் விலை ஏழாயிரத்து அறுபது ரூபாயாக (ரூ.7,060/-)உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஆறாயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்படுகிறது.

Ornament

Ornament

கடந்த சில நாட்களாகவே எகிறியடித்து வரும் தங்கத்தின் விலை இன்று  ஒரு கிராம் ஏழாயிரம் ரூபாயையும் (ரூ.7,000/-) கடந்து சென்றுள்ளது தங்கம் வாங்க நினைப்பவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றின் விலை இன்று நூற்றி ஓரு ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-)உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு பேரிடியாக உணரப்படுகிறது.

google news
Continue Reading

Trending