Finance
முடிச்சு விட்டீங்க போங்க…அடிச்சி தூக்கிய தங்கம் விலை!…
தங்கத்தின் விலை அடுத்தடுத்து ஏறுமுகத்திலிருந்து வந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. புதிய உச்சமாக சவரன் ஒன்று அறுபது ஆயிரம் ரூபாயை அடைந்து விடுமோ? என்ற பயம் இப்போதே எழத்துவங்கியிருக்கிறது.
சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. நேற்று விற்கப்ட்ட விலையிலிருந்து இன்று அதிகரித்து காணப்படுகிறது . ஒரு கிராம் நேற்று ஏழாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7,375/-) விற்கபனையாகி வந்தது.
இன்று கிராமிற்கு அறுபத்தி ஐந்து ரூபாய் (ரூ.65/-) அதிகரித்துள்ளது. இதனால் இன்றைய ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏழாயிரத்து நானூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.7,440/-) இருக்கிறது.
ஒரு சவரனின் விலை நேற்றை விட இன்று ஐனூற்றி இருபது ரூபாய் (ரூ.520/-)அதிகரித்துள்ளது. நேற்று சரியாக ஐம்பத்தி ஒன்பதாயிரம் ரூபாயாக (ரூ.59,000/-) இருந்து வந்த தங்கம் இன்றைய விலை உயர்வின அடுத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து ஐனூற்றி இருபது ரூபாயாக (ரூ.59.520/-) மாறி இருக்கிறது.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நேரத்தில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது ஆபரணப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதே போல தான் வெள்ளியும் இன்று விலை உயர்வினை சந்தித்து இருக்கிறது.
ஒரு கிராம் நூற்றி எட்டு ரூபாய்க்கு (ரூ.108/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராம் ஒன்றின் விலை நூற்றி ஒன்பது ரூபாயாக (ரூ.109/-) உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாயாக (ரூ.1,08,000/-) இருந்து வந்த நிலையில் இன்று விலை உயர்வை அடுத்து ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.