வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று (ஜூலை 23) நடைபெறுகிறது. அரையிறுதி போட்டியில் வங்கதேசம் ஏ அணியை எதிர்கொண்ட இந்தியா ஏ அணி, நிஷாந்த சிந்துவின் அபாரமான பந்து வீச்சு மற்றும் கேப்டன் யாஷ் துல்-இன் அதிரடி பேட்டிங் காரணமாக வெற்றியை ருசித்து இறுதி போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது.
இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோத இருப்பது கிரிக்கெட் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டி கொலம்போவில் நடைபெறுகிறது. இறுதிபோட்டி துவங்கும் முன், இந்தியா ஏ அணியின் சாய் சுதர்ஷன், முன்னாள் இந்திய அணி கேப்டன்கள் எம்.எஸ். டோனி மற்றும் விராட் கோலியுடன் தனது பேச்சுவார்த்தையை நினைவு கூர்ந்து இருக்கிறார்.
வளர்ந்து வரும் ஆசியோ கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக சாய் சுதர்ஷன் 110 பந்துகளில் 104 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தன் மீது அதிகளவு வேலை செய்ய எம்.எஸ். டோனி எப்போதும் வலியுறுத்துவார் என்று சாய் சுதர்ஷன் தெரிவித்தார். மேலும் டோனியை போன்ற மனநிலையில் எப்போதும் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“அனைவருக்கும் எம்.எஸ். டோனியை நன்றாக தெரியும். அவர் மிகவும் அமைதியானவர், அவரிடம் எப்போது பேசினாலும், அவர் என்னை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்ய வலியுறுத்துவார். மேலும் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வலியுறுத்துவார். மற்றவர்களை போன்றிருக்க முயற்சிப்பது, வேறு எதையாவது செய்ய முயற்சிப்பது உள்ளிட்டவைகளை விட அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.”
“விராட்-இன் மனம் மிகவும் உறுதியானது. இதனால், அவரிடம் இருந்து இதனை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். அவரிடமும் நான் பேசி இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
தற்போதைய இந்தியா ஏ அணியில் துல், துருவ் ஜுரெல், சாய் சுதர்ஷன், அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். அந்த வகையில், இன்றைய இறுதி போட்டி அதிக பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…