ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்தியா வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் நவம்பர் 5ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கின்றது. இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கும் எனவும், அடுத்து டிசம்பர் 6, 14, 26, வரும் ஜனவரி 6 ஆகிய தேதிகளில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் ரோகித் சர்மா தனது சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக இருக்கின்றார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நடைபெறும் போது ரோஹித் இல்லத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், அதில் அவர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ரோகித் சர்மாவுக்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ தேர்வு செய்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா இல்லாத காரணத்தால் இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்த போவதாகவும், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு பும்ராவுக்கு தான் டெஸ்ட் கேப்டன் பதவி கிடைக்கும் என்றும் பிசிசியை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…