இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?…இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கம்!…

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து நேற்று முன் தினம் துவங்கியது. டாஸ் கூட போடப்படாமல் மழை குறுக்கீட்டின் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது.

இரு அணிகளுமே சம பலம் பொருந்தியவை என்பதால் ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்த தொடரைப் பொறுத்த வரையில். இரண்டாவது நாளான நேற்று டாஸை வென்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ரோஹித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் துவக்க ஆட்டக்காரராக களம் சென்றார். யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் வைத்து நடந்து வரும் இந்தப் போட்டியில் நாற்பத்தி ஆறு ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அதிர்ச்சியளித்தது.

Test Cricket

சமீப காலமாக மூன்று வடிவங்களைக் கொண்ட அனைத்து சர்வதேச போட்டிளில் தரமிக்க விளையாட்டி காட்டி வந்த இந்திய அணி வீரர்கள் நேற்று நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு பதில் சொல்ல முடியாமல் சோரம் போனார்கள்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கியது நியூஸிலாந்து. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திரா நூற்றி முப்பத்தி நான்கு ரன்களைக் குவித்தார். டிம் சவுதி அறுபத்தி ஐந்து ரன்களை குவித்தார்.

நியூசிலாந்து அணி நானூற்றி இரண்டு ரன் களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். இந்தியாவை விட முதல் இன்னிங்ஸில் முன்னூற்றி ஐம்பத்தி ஆறு ரன்களை முன்னிலையாக பெற்றுள்ளது நியூஸிலாந்து.

மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கியுள்ள இந்தியா பதினான்காவது ஓவரின் நிறைவில் எடுத்து விக்கெட் இழப்பின்றி ஐம்பத்தி ஐந்து ரன்களை எடுத்துள்ளது. துவக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா இருபத்தி ஆறு ரன்களையும், ஜெய்ஷ்வால் இருபத்தி எட்டு ரன்களையும் குவித்து பொறுப்போடு ஆடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? இந்தியா என்பது தான் இப்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் மனதில் எழக்கூடிய முதல் கேள்வியாக இருந்து வருகிறது. முன் காலங்களில் இது போன்ற தடுமாற்றத்தினை சந்தித்து அதன் பின்னர் மிகப் பெரிய எழுச்சியை சந்தித்து போட்டிகளை வென்றும் வந்திருக்கிறது இந்திய அணி. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் மீதமிருக்கும் அடுத்த நாட்களிலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

sankar sundar

Recent Posts

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

1 hour ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

3 hours ago