இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆறுதல் தரும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது இந்திய ரசிகர்களிடையே.,
இப்படிப் பட்ட நேரத்தில் ஆடவர் அணியை ஆட்டிப்படைத்த நியூஸிலாந்து ஆடவர் அணியை பழிவாங்கும் விதமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டின் பெண்கள் அணியை ஒரு நாள் தொடரில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இரு அணிகளும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தலா இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்து வந்தது.
இதனால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டி துவங்கும் முன்னரே அதிக எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 49.5 ஓவர்களில் 232 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ப்ரூக் ஹல்லிடே 86 ரன்களையும், பில்மர் 39 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இந்திய அணியின் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ப்ரியா மிஷ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 233 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் துவக்கத்திலிருந்தே பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா 122 பந்துகளில் 100 ரன்களை குவித்தார்.
அவருக்கு அடுத்த படியாக ஹர்மீத் கவுர் 63 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். இறுதியில் இந்திய பெண்கள் அணி 44.2 ஓவர்களிலேயே 236 ரன் களை குவித்து வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து நியூஸிலாந்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆடவர் அணி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளும் வண்ணம், இந்திய பெண்கள் அணி தொடரை வென்று ஆறுதலை தந்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…