Connect with us

Cricket

ஒரு ரன்னில் நழுவிய சாதனை…தாக்குபிடிக்குமா?…அல்லது தவிடுபொடி ஆகுமா இந்திய அணி?…

Published

on

Indian Team

 

இந்தியாவில் நியுஸிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, தனது சுற்றுப் பயணத்தை துவங்கியுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்த இரு அணிகளுக்கிடையேயான
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக வாகை சூடிய இந்திய அணி, துவக்கப் போட்டியிலேயே நியூஸிலாந்து அணியிடம் வாங்கிக் கட்டி வருகிறது.

சொந்த மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோருக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்ததோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. முதல் நாள் போட்டி மழை குறுக்கீட்டின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் அபார பந்து வீச்சாரல் நியூஸிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு இம்சை கொடுத்திருந்தனர்.

ஒரு வழியாக சர்பராஸ்கானின் அபார ஆட்டத்தினால் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பியது இந்திய அணி.

Test Team

Test Team

195 பந்துகளை எதிர்கொண்டு 3 சிகஸ்ரகள், 18 பவுண்டரிகள் உதவியோடு 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சர்பாரஸ் கான்.

டிம் சவிதியின் பந்து வீச்சில் அஜாஸ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். சர்பராசுக்கு உறுதுணையாக எதிர் முனையில் அதிரடி காட்டி வந்த வீக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டு அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.

150பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்திருந்த நேரத்தில் வில்லியம் ஓரவுர்கே பந்து வீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.அடுத்து வந்த ராகுல், ஜடேஜா ஆகியோர் 12,  5 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனதால், ஆட்டத்தில் மீண்டும் நியூஸிலாந்தின் கைஓங்கியுள்ளது.

கடைசி நாள் ஆட்டமானது நாளைய தினம் நடக்க இருக்கும் நிலையில் பங்களாதேசுக்கு எதிராக சதமடித்து அசத்திய ஆல்-ரவுண்டர் அஷ்வினும் 15ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இன்னிங்ஸ் லீடு பெற்றிருந்தாலும் சேஸிங் செய் முடியாத மிகப் பெரிய ஸ்கோரினை இலக்காக கொடுப்பார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்? அல்லது முடிந்த வரை போராடி பேட்ஸ்மேன்கள் நிர்ணயித்து கொடுக்கும் இலக்கிற்குள் நியூஸிலாந்து அணியை ஆல்-அவுட் செய்வார்களா பவுலர்கள்? அல்லது நியூஸிலாந்து அணியை வெற்றி பெற விட்டு அவர்களிடம் சரண்டர் ஆகப்போகிறதா இந்திய அணி? என்பது நாளை தெரிந்து விடும். தொன்னூற்றி எட்டு புள்ளி மூன்று ஓவர்களில் நானூற்றி அறுபது
ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது இந்திய அணி.

google news