Cricket
பாகிஸ்தானை பதற வைத்த வங்கதேச பவுலர்.. கம்பீரின் பக்கா ஸ்கெட்ச்.. மிஸ்ஸே ஆகாது..!
கிரிக்கெட் உலகில் மற்ற அணிகளை போன்றே இந்திய அணியும், ஒவ்வொரு தொடருக்கும் முன்பு தீவிர பயிற்சி எதிரணி வீரர்களை எதிர்த்து விளையாடும் யுக்திகளில் கவனம் செலுத்தி அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதே பாணியை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கைவிடுவதாக தெரியவில்லை.
அடுத்த வாரம் துவங்க இருக்கும் வங்கதேச தொடருக்கு தயாராகும் வகையில் கவுதம் கம்பீர், இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்தும் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தினார். இதற்காக நான்கு நாள் பயிற்சியில் பஞ்சாப்-இன் குர்நூர் ரார் அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐந்து முதல்-தர போட்டிகளில் விளையாடி இருக்கும் குர்நூர் கடந்த ஐபிஎல் தொடரின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
போட்டிகளில் அதிகம் சோபிக்காத பட்சத்திலும் 24 வயதான குர்நூர் அவரது 6.45 அடி உயரம் மற்றும் பவுன்சர்களை வீசக்கூடிய திறன் காரணமாக இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட செய்வதற்காக அழைக்கப்பட்டார். வங்கதேச அணியின் நஹித் ராணா சமீபத்திய பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
அந்த வகையில், நஹித் ராணா போன்று பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் பயிற்சி அளிக்கவே கவுதம் கம்பீர் குர்நூரை வரவழைத்துள்ளார். இவரது உயரம் காரணமாக அவர் ஏற்படுத்தக்கூடிய பவுன்ஸ்-ஐ இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால், தான் குர்நூர் இந்திய அணியின் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இதுதவிர இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இந்திய வீரர்களிடம் உரையாடினார். அப்போது நட்சத்திர வீரர்களுக்கு எப்படி பந்துவீசுவது, எத்தகைய வலைப்பயிற்சிகளில் ஈடுபடுவது மற்றும் பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.