Connect with us

Cricket

ரசிகர்களுக்கு குஷி தான்.. மூன்று முறை மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் – எப்படி தெரியுமா?

Published

on

Ind vs Pak-Featured-Img

ஆறு நாடுகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 2023 அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Ind vs Pak

Ind vs Pak

இந்த போட்டி மட்டுமின்றி ஆசிய கோப்பையிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்தில் எதிர்கொள்ள இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் அனைத்து அணிகளும், மற்ற அணிகளுடன் ஒருமுறை விளையாட வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா வெளியிட்ட அட்டவணை படி, பாகிஸ்தான் அணி ஏ1 ஆகவும், இந்திய அணி ஏ2 ஆகவும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்று போட்டியில் விளையாட முடியும். இந்த போட்டி கொலம்போவில் நடைபெற இருக்கிறது.

IndvsPak-1

IndvsPak-1

சூப்ர் 4 சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினால், இறுதி போட்டியில் இரு அணிகளும் ஒரே தொடரில், மிக குறுகிய காலக்கட்டத்தில் மூன்றாவது முறையாக விளையாட முடியும்.

Ind-vs-Pak-asia-cup

Ind-vs-Pak-asia-cup

ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி கொலம்போவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 50 ஓவர்கள் கொண்ட உலக கோப்பை தொடருக்கு முன், இந்த தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி இந்திய அணி நேபால் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி கண்டியில் நடைபெற இருக்கிறது.

google news