தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல்கள் நடந்துமுடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு கடந்த 10-ம் தேதி 7 மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பஞ்சாபின் ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷீத்தலை 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஹிமாச்சலப்பிரதேசத்தின் டேரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்குர் வெற்றிபெற்றார்.
இதேபோல், மேற்குவங்கத்தின் ராய்கஞ்ச், பக்தா, ராணாகட் மற்றும் மணிகட்ல என 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கொடி நாட்டியது. விக்கிரவாண்டியில் திமுகவும் உத்தராகண்ட் மங்கலூர், பத்ரிநாத், ஹிமாச்சலப்பிரதேசத்தின் நலாகர்க் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், பீகாரின் ரபௌலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான ஷங்கர் சிங், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதள வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
ஹிமாச்சலப்பிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் அமர்வாரா என இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…