91 வருடங்களில் இப்படி நடந்ததே இல்லை.. தர்ம சங்கடத்தில் இந்திய அணி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் தான் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. சில வாரங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ரன் குவிப்பு உள்பட ஏராளமான சாதனைகள் இந்தியா படைத்து அசத்தியது.

அப்படியே சில வாரங்களில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆரம்பமே இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. மழை காரணமாக முதலாவது நாள் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடங்க இரு அணிகளும் களமிறங்கின.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய கேப்டன், தனது தலைமையிலான இந்திய அணி இப்படியொரு சாதனையை படைக்கும் என்று நினைத்திருக்க மாட்டார். அவ்வளவு ஏன், இந்திய ரசிகர்கள் கூட இந்திய அணி தனது ஹோம் கிரவுண்டில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது,

இது ஹோம் கிரவுண்டில் இந்திய அணி அடித்த மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அடித்த மிகக்குறைந்த மூன்றாவது ஸ்கோர் ஆக இருக்கிறது. இந்திய அணி கடந்த 91 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஹோம் கிரவுண்டில் 50-க்கும் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது இதுவே முதல் முறை ஆகும்.

பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து அணியின் ஹென்ரி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 100 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியாவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரூர்கி 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago