இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி இருக்கும் நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் முக்கிய மாற்றமாக குல்தீப் யாதவ், முகமது சிராஜ், கே.எல்.ராகுல் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், சுபமன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பிட்சில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் பெரிய அளவில் ஏற்படுத்த முடியாததால் 7-வது ஓவரின் போதே ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச வந்துவிட்டார்.
பிட்சில் சுழலுக்கு அதிக ஒத்துழைப்பு இருந்ததால் முதல் நாள் ஆட்டத்தில் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் 8 மற்றும் 6 ஓவர்களை தான் வீசினார்கள். மற்ற நேரங்களில் ரவீந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான் அதிக அளவு ஓவர்களை வீசினார்கள். ஜடேஜா 18 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
வாஷிங்டன் சுந்தர் 23 ஓவர்களை வீசிய நிலையில் 7 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார். மேலும் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259/10 ரன்களை எடுத்து இருந்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 16/1 என்ற ஆண்களை எடுத்து 243 ரன்கள் பின்தங்கி இருக்கின்றது. ரோகித் சர்மா டக்அவுட் ஆன நிலையில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 6 (25), ஷுப்மன் கில் 10(22) ரன்களும் எடுத்திருந்தார்.
இரண்டாவது நாளில் பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நியூசிலாந்தில் ஸ்பின்னர்கள் மிட்செல் சாண்ட்னர், அஜாஸ் படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடர்ந்து நியூசிலாந்து அணியில் நிறைய ஸ்பின்னர்கள் இருப்பதால் இரண்டாவது நாள் இந்தியாவுக்கு சவாலாக தான் இருக்கும் என்று கருதப்படுகின்றது. ஆகையால் நாளைய ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…