ஐசிசி டி20 உலகக் கோப்பையை 2007க்கு பின்னர் வென்ற இந்திய அணி நாடு திரும்பி இருக்கும் நிலையில் முதல் வேலையாக பிரதமர் மோடியை சந்தித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் ஏற்பட்ட புயலால் நாடு திரும்ப முடியாத நிலை இருந்தது. ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து இந்தியா திரும்பி இருக்கிறது இந்திய அணி. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடம் கழித்து கோப்பையை தன் வசப்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து நேற்று வெஸ்ட் இண்டீஸில் இருந்து ஏர் இந்தியா சாம்பியன்ஸ்24 என்னும் தனி விமானத்தினை பிசிசிஐ ஏற்பாடு செய்தது. அதில் கிளம்பிய இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். இதை தொடர்ந்து, நாட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்திய அணி சந்தித்து இருக்கிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கேப்டன் ரோகித் உள்பட மொத்த டீமும் இந்திய ஜெர்சியில் பிரதமரை அவர் இல்லத்தில் சந்தித்து இருக்கின்றனர். இதுகுறித்து புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மும்பைக்கு விமானத்தின் மூலம் வரும் இந்திய அணி மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மாலை (ஜூலை4) வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவை ரசிகர்கள் கூட்டமும் அலைமோத தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…