Connect with us

Cricket

அதிகரித்து வரும் இந்திய அணியின் ஆதீக்கம்…பேட்டிங், பவுலிங் தர வரிசைகளில் தலை நிமிர்வு…

Published

on

Indian Team

கிரிக்கெட் விளையாட்டு உணர்வோடு கலந்து விட்டது இந்திய ரசிகர்களுக்கு. சச்சின் அவுட் ஆகி விட்டால் டிவியை ஆஃப் செய்து விட்டு வேலையை பார்க்க சென்றதிலிருந்து, பதினோறாவது பேட்ஸ்மேன் ஆடும் வரை அசையாமல் டிவி முன் கண் இமைக்காமல் பார்க்கும் வரை வளர்ந்திருக்கிறது ரசிகர்களின் உணர்வு. இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் காட்டும் திறன் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற மனநிலை தான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை இருந்து வருகிறது.  ஆனால் இப்போது இந்த நிலைமை தலை கீழாக மாறி வருகிறது. ஐபில் போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் தான் இந்திய அணி எழுச்சி பெற்றுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இப்போது உள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை எதிர்த்து விளையாடும் எதிர் அணிகள் எல்லாம் பயத்திலேயே இருந்து வருகின்றது.

இளம் வீரர்களின் வருகையும் அவர்களது திறனும், ஆற்றலும் வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது இந்திய அணியை. தோனியின் கேப்டன்சியின் போது தான் இந்த நிலை உச்சத்தை அடையத்துவங்கியது. இதற்கு விதை போட்டது சவுரவ் கங்குலி என சொல்லப்பட்டு வந்த நேரத்தில். டெஸ்ட், ஐம்பது ஓவர் ஒரு நாள், இருபது ஓவர் போட்டிகள் என மூன்று விதமான பரிணாமத்திலும் இந்திய வீரர்களின் ஆதீக்கம் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது .

டெஸ்ட் போட்டிகளின் சர்வதேச தர வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி, மீதமுள்ள ஐம்பது ஓவர், இருபது ஓவர் போட்டிகள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Indian Test Team

Indian Test Team

அதே போல பேட்டிங், பவுலிங், ஆல்-ரவுண்டர்கள் ரேங்கிங்களிலும் இந்திய வீரர்கள் தங்களது ஆதீக்கத்தை செலுத்தியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் முறையே முதல், இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

பவுங்கில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் இடத்தில் இருந்து வருகிறார். நியூசிலாந்து, ஆஸ்திரலிய அணிகளுடனான தொடர்களில் விளையாட தங்களை தயார் படுத்தி வரும் இந்திய வீரர்களின் கவனம் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தின் மீதும் இருந்தும் வருகிறது.

google news