Cricket
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியின் தகவல்…இவங்க கூடவா முதல் மோதல்?…
இன்று கிரிக்கெட் விளையாட்டில் அபாயகரமான அணியாக திகழ்ந்து வருகிறது இந்தியா. டெஸ்ட், ஐம்பது ஓவர் ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் போட்டி என சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆதீக்கத்தை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் இறுதிப் போட்டி வரை சென்றது கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில்.
ஆனால் விட்டதைப் பிடித்தே தீருவோம் என வைராக்கியமாக விளையாடி சாம்பியன் பட்டத்தினை வென்று அசத்தியது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த ஆண்டு நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில்.
கபில் தேவ் தலைமையிலான அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியும் ஒரு நாள் போட்டிகளின் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. 50பது ஓவர் வேர்ல்டு கப் வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி, இதே போல இரண்டு முறை இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இலங்கைக்கு எதிராக 2011ம் ஆண்டு இந்தியாவில் வைத்து நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அப்போதைய கேப்டன் தோனி தான் முதல் முறை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியின் கேப்டன். சர்வதேச ரேட்டிங்கில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி இப்போது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.
பெங்களூருவில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது ரோஹித் சர்மாவின் தலைமையிலான அணி.
இருந்த போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆளுமை மிக்க அணியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
நியூஸிலாந்துடன் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதமிருப்பதால் இந்திய அணி மீண்டு வந்து மிகப்பெரிய வெற்றியை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தனது நற்பெயரை காப்பாற்றி வரும் இந்திய அணிம் தனது முதல் டெஸ்ட் போட்டியை எந்த ஆண்டு விளையாடியது தெரியுமா?. அதுவும் எந்த அணியுடன் எனத் தெரியுமா?.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 1932ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுகத்தை கொடுத்தது இந்திய அணி. போர்பந்தர் மஹராஜாவின் தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சுதந்திரம் கிடைக்கும் முன்னரே இந்திய அணி. அந்த அணிக்கு துணைத் தலைவராக கே.எஸ்.லிம்பிடி இருந்திருந்தார்.