govt update news
ரயில் டிக்கெட் புக்கிங்… வயதானவர்களுக்கு இத்தனை சலுகைகள் இருக்கா…? இதோ தெரிஞ்சுக்கோங்க..!
ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல வசதிகள் உள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மக்களுக்கு ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் வசதியான ஒன்று. இந்திய ரயில்வே பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வசதிகள். இது அவர்களின் பயணத்தை வசதியாக மாற்றுகின்றது. இந்த வசதிகள் அவர்களின் பயணத்தை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கின்றது.
இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சிறந்த பயணத்தை தரக்கூடியதாக தற்போது மாறி இருக்கின்றது. அப்படி இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்களுக்கு என்னென்ன சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் சலுகை வழங்கியுள்ளது. 60 வயது முதல் ஆண்களுக்கும், 58 வயது முதல் பெண்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டிக்கெட்டுகளில் சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பயணத்தை மிகவும் சிக்கனமாகின்றது. நீண்ட நேரம் பயணங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டிய தேவைக்கு இல்லை. ரயில்வேயின் இந்த வசதி மூத்த குடிமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கின்றது. குறைந்த கட்டணத்தில் அவர்களால் பயணம் செய்ய முடியும். ஏனென்றால் வயதானவர்கள் மேலே உள்ள பெர்த்தில் ஏறுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் வயதான பயணிகளுக்கு கீழ்பெர்த் மட்டுமே கிடைப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்கின்றது.
தனியாக பயணம் மேற்கொள்ளும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகின்றது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் எந்தவித கோரிக்கையும் இல்லாமல் கீழ்ப்படுகை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலிகள் மற்றும் பிற உதவிகளும் கிடைக்கின்றது. இந்த வசதிகள் ஸ்டேஷனுக்கு நடக்க சிரமப்படும் பயணிகள் மற்றும் கனமான லக்கேஜ் எடுத்து செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த சேவைகள் அவர்களின் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் திரும்புவதற்கும் பெரிய அளவில் உதவுகின்றது. இந்தியன் ரயில்வே தூத்துக்குடி மக்களுக்கு சிறப்பு பெர்த் ஒதுக்கீட்டை அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்லீப்பர் பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டிகளிலும் 6 கீழ்ப்பெர்த்துகளும், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்குகளில் மூன்று கீழ்ப்பெர்த்துகள் என்று ஒதுக்கப்படுகின்றது.
இதனால் வயதான பயணிகள் வசதியாக பயணம் செய்ய முடியும். இந்த வசதி 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் பொருந்தும். ரயில்வேயில் இந்த வசதி மூத்த குடிமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகின்றது.