Connect with us

Cricket

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!.. 12 ஆண்டுகள் பின் இடம்பெறும் அந்த வீரர்!..

Published

on

team india

இந்த வருடம் கிரிக்கெட்டை உலகை பொருத்தவரையில் இந்திய அணிக்கு மிக முக்கியமான வருடமாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து பல தொடர்களில் இந்திய அணி விளையாண்டாலும் தன் சொந்த மண்ணில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இதனுடன் ஆசிய கோப்பை காண தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து உலக கோப்பை தொடரில் அக்டோபர் 05 தேதி முதல் விளையாட உள்ளது. தற்போது முதலாவதாக நடைபெற உள்ள ஆசிய கோப்பை காண இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

team india 2

team india 2

ஆசிய கோப்பை இந்திய அணியின் 18 வீரர்கள் :

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 16 முதல் 18 வீரர்கள் வரை‌ தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ் வீரர்களின் தேர்வு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை மட்டும் இல்லாது அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் என அனைத்திற்கும் சேர்த்தே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் விராட் கோலி,ஹர்திக் பாண்டியா,ரவீந்திர ஜடேஜா,சுபம் கில் பூம்ரா, போன்றவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார்கள்.

மேலும் ஜெய் தேவ் உன்னத்கட் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோரும் ஆசிய கோப்பைக்காகன அணியில் இடம் பெற்றுள்ளனர். பிசிசிஐ இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஊடகத்திற்கு வெளியிட்டுள்ளது. இதில் ஜெய் தேவ் உன்னத்கட் இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை காண தொடரில் 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட உள்ளார்.

jaydev unadkat

jaydev unadkat

மேலும் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கூடிய விரைவில் முழு உடல் தகுதியுடன் இந்திய அணியில் இணையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பும்ராவும் நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணிக்கு திரும்ப உள்ளார். மேலும் இவர்களுடன் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாட உள்ளனர். ஆறாவது பௌலராக ஹர்திக் பாண்டியாவும் ஒரு சில ஓவர்களை வீசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுழல் பந்துவீச்சாளர் :

மேலும் இவர்களுடன் குல்திப் யாதவ் மற்றும் சாஹல் இருவரும் ஸ்பின் பெளலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் என ஸ்பின் ஆல் ரவுண்டர்களும் கைவசம் உள்ளனர்.

ஆசிய கோப்பை காண இந்திய அணி வீரர்கள் :

ரோகித் சர்மா (கேப்டன்),சுபம் கில்,இஷான் கிஷன்,விராட் கோலி,சூரிய குமார் யாதவ்,ஸ்ரேயாஸ் ஐயர்,கே.எல்ராகுல்,ஹர்திக்பாண்டியா,ரவிந்திர ஜடேஜா,முகமது ஷமி,முகமது சிராஜ்‌,பும்ரா,ஜெய் தேவ் உன்னத்கட் குல்திப் யாதவ்,அக்சர் பட்டேல்,சஞ்சு சாம்சங்,ஷார்தூல் தாகூர்,முகேஷ் குமார் மற்றும் சாஹல்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *