இந்திய அணி உலக கோப்பையை வென்றாலும் பார்படாஸில் கடுமையான புயல் நெருங்கி வருவதால் அங்கிருந்து இந்திய வீரர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு மாதமாக டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வந்தது.
கடந்த சனிக்கிழமை பார்படாஸில் உலக கோப்பை பைனல் நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இந்திய ரசிகர்களுக்கு மிக பெரிய சந்தோஷமான நிகழ்வாக இது அமைந்தது. 2013ம் ஆண்டிற்கு பிறகு இந்தியா வாங்கும் முதல் ஐசிசி கோப்பை இதுதான்.
பார்படாஸில் போட்டி முடிந்து 3 நாள் சென்ற பின்னரும், இந்திய வீரர்கள் தாயகம் திரும்பவில்லை. அங்கு ஏற்பட்ட பெரில் புயல் அபாய கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. இதனால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெரில் புயல் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அருகில் மையம் கொண்டுள்ளதால் வீரர்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது புயல் தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால், விரைவில் விமான நிலையம் திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணி புதன்கிழமை ஜூலை 3ந் தேதி அதிகாலை 3.30க்கு கிளம்பி 7.45க்கு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வர இருக்கின்றனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…